வருடந்தோறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் அதற்கு முந்திய ஆண்டுக்குரிய அறிக்கை வெளியிடப்படும். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நோக்கங்கள், செயற்பாடுகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், முன்னேற்ற நடவடிக்கைகள், தடைகள், சேவைகள், சபையின் பிரிவுகள், நடைமுறையிலுள்ள செயற்றிட்டங்கள், எதிர்கால செயற்றிட்டங்கள் போன்ற விடயங்கள் இந்த ஆண்டறிக்கையில் அடங்கியிருக்கும். இந்த ஆண்டறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூட்டிணைந்த திட்டமிடல் பிரிவைச் (Corporate Planning Division) சார்ந்ததாகும்.
Monday, May 13, 2013
Thursday, May 9, 2013
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூட்டிணைந்த திட்டம் 2012-2016 (CORPORATE PLAN OF NATIONAL WATER SUPPLY AND DRAINAGE BOARD 2012-2016)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முறைமைகளுக்கு பொறுப்பான ஒரு உப திணைக்களமாக பொது வேலைகள் திணைக்களத்தின் கீழ் ஆரம்பிக்கப் பட்டது. 1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாராளுமன்றச் சட்டமொன்றின் மூலம் ஒரு நியதிச் சபையாக மாற்றப் படும் வரை, 1965 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு அமைச்சுக்களின் கீழ் ஒரு பிரிவாக இச்சபை செயற்பட்டு வந்தது.
Wednesday, May 8, 2013
லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் புனரமைப்புக்கு ஹங்கேரி ரூபா 6 பில்லியன் நிதியுதவி
கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களின் குடி நீர்த் தேவையானது அம்பத்தாலே, லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது. லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் 1886 ம் ஆண்டும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் 1957 ம் ஆண்டும் நிர்மாணிக்கப் பட்டது. இவ்விரண்டு நிலையங்களினாலும் கொழும்பு மற்றும் அண்டிய பகுதிகளின் 13.5% நீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. தற்போது லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 45,000 கனமீற்றர் நீரும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 52,000 கனமீற்றர் நீரும் உற்பத்தி செய்கின்றன. கொழும்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சனத்தொகைப் பெருக்கமானது மேலதிக நீர்த் தேவைக்கு வித்திட்டுள்ளது.
Friday, April 19, 2013
DOMESTIC SEPTIC TANKS AND SOAKAGE PITS
SEPTIC TANKS
Before we talk about septic tanks, it is worth knowing why we need a septic tank. As we all know, the septic tank receives what we all do not want; that is sewage. Although we don't need sewage, if the matter is left unattended or not given the due priority that it deserves, the mayhem that can cause may keep you worried until you dispose it safely.
Often the disposal of sewage is a real challenge to the house builders and all of us have to face the problem of building of our own house sooner or later. The building of houses keeping provision for safe disposal of sewage is a very important aspect in building. It is human nature that we tend to think more about what happens first than what happens last.
Sewage disposal is often given the least priority and in most of the cases we want to do something for it and forget about it. However if the thing is not done at once in a way it demands that can make .you and your environment polluted. Therefore it is extremely useful to think about disposal of sewage in an environmentally friendly manner in either new house building and or maintenance of the existing houses. This will keep you relaxed and saves lot of money in maintaining the services later on.
Thursday, January 10, 2013
நீரைச் சேமிப்பது எமது வீடுகளிலேயே ஆரம்பமாகின்றது....../././
சாதாரணமாக ஒரு நகர்ப்புற வீட்டுக்குரிய நீர்ப்பாவனயானது 20 - 24 அலகுகளாகும்.
அதாவது நீர்க் கட்டணமானது கிட்டத்தட்ட 350 - 550 ரூபாவாகும்.
உங்களது நீர்க் கட்டணமானது இதைவிட அதிகமாயின் நீர் உங்கள் வீட்டிலும் விரயமாகின்றது.
இதற்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த எம்மால் முடியுமா.??



