ஏகப்பட்ட விளம்பரங்கள், சஞ்சய் லீலா பஞ்சாலியின் இயக்கம், பிரமாண்டமான டிரயிலர் எல்லாவற்றிற்கும் மேல் நான் படம் பார்க்க போனதற்கு மூன்று காரணங்கள்.... ஒன்று தீபிகா, ரெண்டு தீபிகா மட்டும், மூன்று தீபிகா மட்டும் தான்... பொதுவாகவே ஹிந்தி படங்கள் பார்க்க போய் ஏமாறுவது கிடையாது... ராம் லீலா கொடுத்த காசுக்கு டபுள் திருப்தி...
ஷேக்ஸ்பியரின் "ரோமியோ-ஜூலியட்" கதையின் தாக்கம் என ஆரம்பித்திலேயே சொல்லி விடுகின்றார்கள்.. அப்போ கதை நமக்கு தெரிஞ்சு போச்சு... இனி படத்தை சுவாரசியமாக கொண்டு போக வேண்டுமே... அதில் பரிபூரண வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.