என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......
Showing posts with label National Water Supply and Drainage Board. Show all posts
Showing posts with label National Water Supply and Drainage Board. Show all posts

Tuesday, July 23, 2013

பியகம நீர் வழங்கல் திட்டம்

  • 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி மக்களின் பாவனைக்காக கையளிக்கப் பட்டுள்ளது.
  • தேசிய நீர் வழங்கல் தொகுதிக்கு நாளொன்றுக்கு 180 மில்லியன் கன மீட்டர் நீரை வழங்குகின்றது.
  • 1 மில்லியன்னுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் பயன் பெறுகின்றனர்.


Thursday, July 18, 2013

கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம்

திட்ட விபரம்:

உள்ளடங்கும் சனத்தொகை : 40,000
திட்டத்திற்கான செலவு : 1,655 மில்லியன் 

Wednesday, June 5, 2013

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கான கழிவு நீர் வெளியேற்றல் செயற்றிட்டம்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் செயற்படுத்தப்படும் மற்றுமொரு பயனுள்ள செயற்றிட்டம் இதுவாகும். இதிலே பின்வரும் பிரதான செயற்பாடுகள் முக்கியமானவை.

  • ஏற்கனவே இருக்கும் கழிவு நீர்க் குழாய்களின் புனரமைப்பு 
  • புதிய Pump House கட்டுமானம் 
  • இரசாயன கழிவுகளுக்கான தனியான கழிவு நீர்க் குழாய்கள்
  • புதிய Pump களை பொருத்துதல்

Monday, May 13, 2013

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 2011 ஆம் ஆண்டறிக்கை - கருப்பக்க வடிவமைப்பு (THEME PAGE DESIGN)



வருடந்தோறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் அதற்கு முந்திய ஆண்டுக்குரிய அறிக்கை வெளியிடப்படும். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நோக்கங்கள், செயற்பாடுகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், முன்னேற்ற நடவடிக்கைகள், தடைகள், சேவைகள், சபையின் பிரிவுகள், நடைமுறையிலுள்ள செயற்றிட்டங்கள், எதிர்கால செயற்றிட்டங்கள் போன்ற விடயங்கள் இந்த ஆண்டறிக்கையில் அடங்கியிருக்கும். இந்த ஆண்டறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூட்டிணைந்த திட்டமிடல் பிரிவைச் (Corporate Planning Division) சார்ந்ததாகும்.

Thursday, May 9, 2013

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூட்டிணைந்த திட்டம் 2012-2016 (CORPORATE PLAN OF NATIONAL WATER SUPPLY AND DRAINAGE BOARD 2012-2016)



தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முறைமைகளுக்கு பொறுப்பான ஒரு உப திணைக்களமாக பொது வேலைகள் திணைக்களத்தின் கீழ் ஆரம்பிக்கப் பட்டது. 1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாராளுமன்றச் சட்டமொன்றின் மூலம் ஒரு நியதிச் சபையாக மாற்றப் படும் வரை, 1965 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு அமைச்சுக்களின் கீழ் ஒரு பிரிவாக இச்சபை செயற்பட்டு வந்தது.

Wednesday, May 8, 2013

லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் புனரமைப்புக்கு ஹங்கேரி ரூபா 6 பில்லியன் நிதியுதவி



கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களின் குடி நீர்த் தேவையானது அம்பத்தாலே, லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது. லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் 1886 ம் ஆண்டும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் 1957 ம் ஆண்டும் நிர்மாணிக்கப் பட்டது. இவ்விரண்டு நிலையங்களினாலும் கொழும்பு மற்றும் அண்டிய பகுதிகளின் 13.5% நீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. தற்போது லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 45,000 கனமீற்றர் நீரும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 52,000 கனமீற்றர் நீரும் உற்பத்தி செய்கின்றன. கொழும்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சனத்தொகைப் பெருக்கமானது மேலதிக நீர்த் தேவைக்கு வித்திட்டுள்ளது.

Friday, April 19, 2013

DOMESTIC SEPTIC TANKS AND SOAKAGE PITS

SEPTIC TANKS


Before we talk about septic tanks, it is worth knowing why we need a septic tank. As we all know, the septic tank receives what we all do not want; that is sewage. Although we don't need sewage, if the matter is left unattended or not given the due priority that it deserves, the mayhem that can cause may keep you worried until you dispose it safely.

Often the disposal of sewage is a real challenge to the house builders and all of us have to face the problem of building of our own house sooner or later. The building of houses keeping provision for safe disposal of sewage is a very important aspect in building. It is human nature that we tend to think more about what happens first than what happens last.

Sewage disposal is often given the least priority and in most of the cases we want to do something for it and forget about it. However if the thing is not done at once in a way it demands that can make .you and your environment polluted. Therefore it is extremely useful to think about disposal of sewage in an environmentally friendly manner in either new house building and or maintenance of the existing houses. This will keep you relaxed and saves lot of money in maintaining the services later on.

Thursday, January 10, 2013

நீரைச் சேமிப்பது எமது வீடுகளிலேயே ஆரம்பமாகின்றது....../././


சாதாரணமாக ஒரு நகர்ப்புற  வீட்டுக்குரிய நீர்ப்பாவனயானது 20 - 24 அலகுகளாகும்.
அதாவது நீர்க் கட்டணமானது கிட்டத்தட்ட 350 - 550 ரூபாவாகும்.

உங்களது நீர்க் கட்டணமானது இதைவிட அதிகமாயின் நீர் உங்கள் வீட்டிலும் விரயமாகின்றது.
இதற்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த எம்மால் முடியுமா.??

Tuesday, December 18, 2012

தயட்ட கிருல்ல (DAYATA KIRULA) - 2013 இல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பங்கு......



தயட்ட கிருல்ல அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய நோக்கம் யாதெனில் ஒவ்வொரு வருடமும் இலங்கையின் சில குறிப்பிட்ட பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதேயாகும்இதற்கான திட்டங்கள் அனைத்துமே குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையான மக்கள் நன்மையடைவதே ஆகும்தயட்ட கிருல்ல திட்டமானது 2013 ஆம் வருடத்தில் அம்பாறைமட்டக்களப்புதிருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நடைபெற உள்ளதுதயட்ட கிருல்ல தேசிய கண்காட்சியானது 2013 பெப்ரவரி நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை அம்பாறை கொண்டவட்டுவான் பிரதேசத்தில் நடைபெற உள்ளதுதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பங்கு தயட்ட கிருல்ல - 2013 திட்டத்தில் என்ன என்பதை பார்க்கலாம்.