என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......
Showing posts with label Hindi. Show all posts
Showing posts with label Hindi. Show all posts

Thursday, December 19, 2013

ராம் லீலா - எனது பார்வையில்...

ஏகப்பட்ட விளம்பரங்கள், சஞ்சய் லீலா பஞ்சாலியின் இயக்கம், பிரமாண்டமான டிரயிலர் எல்லாவற்றிற்கும் மேல் நான் படம் பார்க்க போனதற்கு மூன்று காரணங்கள்.... ஒன்று தீபிகா, ரெண்டு தீபிகா மட்டும், மூன்று தீபிகா மட்டும் தான்... பொதுவாகவே ஹிந்தி படங்கள் பார்க்க போய் ஏமாறுவது கிடையாது... ராம் லீலா கொடுத்த காசுக்கு டபுள் திருப்தி...


ஷேக்ஸ்பியரின் "ரோமியோ-ஜூலியட்" கதையின் தாக்கம் என ஆரம்பித்திலேயே சொல்லி விடுகின்றார்கள்.. அப்போ கதை நமக்கு தெரிஞ்சு போச்சு... இனி படத்தை சுவாரசியமாக கொண்டு போக வேண்டுமே... அதில் பரிபூரண வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். 

Thursday, June 6, 2013

YEH JAWAANI HAI DEEWANI - எனது பார்வையில்


கடந்த மே 31 ஆம் திகதி ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை கடந்த செவ்வாய் கொன்கோர்ட் திரையரங்கில் பார்க்க முடிந்தது. கரன் ஜோகர் தயாரிப்பு மற்றும் ரன்பீர் கபூர் இவர்கள் இருந்தாலும் நான் பார்க்க சென்ற ஒரே காரணம் செல்லம் தீபிகா படுகோன்..... வழமையான கரன் ஜோகர் படங்களின் சாயல் இருந்தாலும் 3 மணித்தியாலங்கள் சுவாரஸ்யமாக செல்கின்றன.