ஏகப்பட்ட விளம்பரங்கள், சஞ்சய் லீலா பஞ்சாலியின் இயக்கம், பிரமாண்டமான டிரயிலர் எல்லாவற்றிற்கும் மேல் நான் படம் பார்க்க போனதற்கு மூன்று காரணங்கள்.... ஒன்று தீபிகா, ரெண்டு தீபிகா மட்டும், மூன்று தீபிகா மட்டும் தான்... பொதுவாகவே ஹிந்தி படங்கள் பார்க்க போய் ஏமாறுவது கிடையாது... ராம் லீலா கொடுத்த காசுக்கு டபுள் திருப்தி...
ஷேக்ஸ்பியரின் "ரோமியோ-ஜூலியட்" கதையின் தாக்கம் என ஆரம்பித்திலேயே சொல்லி விடுகின்றார்கள்.. அப்போ கதை நமக்கு தெரிஞ்சு போச்சு... இனி படத்தை சுவாரசியமாக கொண்டு போக வேண்டுமே... அதில் பரிபூரண வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.
கதை ரொம்ப சிம்பிள்... ராஜாரி, செனேடா என அருகருகே இருக்கும் இடங்கள் (ஊர் அல்ல.. இடம்) நம்ம கோட்டை ரயில் நிலையம், பஸ் நிலையம் மாதிரி... காலம் காலமாக ஆயுத விற்பனை செய்து வரும் இவர்களுக்கிடையே பகை... எடுத்ததற்கெல்லாம் துப்பாக்கி வெடிக்கும்.... இப்படியான நிலையில் இரு ஊர் தலைவர்களின் மகனுக்கும் (ராம்) மகளுக்கும் (லீலா) காதல்... அவ்வளவு தான் கதை.... ராம் ஆக ரன்வீர் சிங்கும் லீலாவாக தீபிகா படுகோன்னும் வாழ்ந்திருக்கிறார்கள்.... ராமின் அண்ணி, லீலாவின் அண்ணி, லீலாவின் தாய் (வில்லி), அனைவருமே தத்தம் வேடங்களை சிறப்பாக உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
நான் ரசித்த காட்சிகள்
"மோர் பாணி தன்கட் கரே.." ன்னு ஆரம்பிக்கும் டைட்டில் கார்டு பாட்டு.. செமையா இருந்திச்சு... அது என்னமோ தெரியல ஹிந்தி படம் எல்லாத்துலயும் டைட்டில் கார்டு ல இருந்தே நம்மள கட்டி போட்டு விடுறாங்க...
ரன்வீர் சிங் அறிமுகமாகும் அந்த துள்ளல் பாட்டு... வண்ண மயமாக இருந்திச்சு... மனுஷன் செமையா டான்ஸ் பண்றார்... உடம்ப பார்க்கும் போது பொறாமையா இருந்திச்சு (லைட்டா..)
தீபிகா துப்பாக்கியுடன் அறிமுகம்.. அழகான காட்சிப்படுத்தல்... செல்லம் துப்பாக்கி பிடிக்கும் அழகையே மெய் மறந்து ரசிக்கலாம்...
தீபிகா வின் அம்மா "எங்களோட பேமிலி பிசினஸ் ஷூட்டிங், ஸ்மக்ளிங், கில்லிங்" ன்னு சொல்லும் இடம் செம... "பா.." ன்னு எல்லோரும் அழைக்கும் அந்த திமிரான வேடத்துக்கு பக்காவா பொருந்தி இருக்காங்க...
தீபிகா வும் ரன்வீர் சிங் கும் ஆடும் அந்த ஹோலி பாடல்.... கேமரா சும்மா பின்னி பெடல் எடுத்திருக்கு... அதுவும் முதல் சீன்லையே தீபிகா ரன்வீர் கிஸ் அடிக்கும் போது பின்னணியில் பறக்கும் அந்த மங்கலான ஹோலி வர்ணங்கள் அழகு ஆகா... "லஹு முன் லகு கயா..." எனும் அந்த பாடல் இன்னொரு "டோலாரே.." எனக்கு..
தீபிகாவின் அறைக்குள் திருட்டு தனமாக நுழையும் ரன்வீருக்கும் தீபிகாவுக்கும் இடையே நடக்கும் சம்பாஷனை ரொமான்ஸ்ஸின் உச்சம்...
"நெஞ்சில முடி இல்லாதவங்கள நம்ப கூடாது"
"உனக்கு கூட தான் இல்ல.."
ரன்வீர் அவசரமாக அறையை விட்டு கிளம்பும் போது இருவரும் அடிக்கும் அந்த கிஸ்... வாவ்... உதடுகள் பிரியும் போது எச்சில் இழுபடும்... பார்க்கும் நமக்கு எச்சில் ஊறும்..
ரன்வீர் சிங்கின் துப்பாக்கி கடையில் நுழையும் தீபிகா ரன்வீருடன் போடும் அந்த குத்தாட்டம்... என்னா மூவ்மெண்டு, என்னா ஸ்டெப்ஸ்...
இரண்டு ஏரியாவிலும் ஆண்களும் பெண்களும் துப்பாக்கியுடனேயே அலைவது வித்தியாசம்..
இரண்டு கோஷ்டிகளும் [போட்டிக்கு பியர் கோப்பைகளை சுட்டுத் தள்ளும் சீன் சிறப்பு.. என்ன ஒவ்வொரு பியர் கோப்பையும் உடையும் போதும் எனக்கு தான் கொஞ்சம் வருத்தம்... (அல்கஹோல் நிலத்துல சிந்தக் கூடாது :) )
சனேடாவில் வைத்து தன் மகன் உடம்பில் எந்த ரஜாரி குண்டும் இருக்க கூடாது ன்னு தீபிகாவின் அம்மா, மகனின் மனைவியை வைத்தே கத்தியால் வெட்டி அனைத்து குண்டுகளையும் வெளியேற்றும் இடம்.. செம
தீபிகாவும் ரன்வீர் சிங்கும் ஊரை விட்டு ஓடி வந்து லாட்ஜ்ஜில் தங்கிஇருக்கும் போது இருவரும் பேசி கொள்ளும் காதல் வசனங்கள்... அட அட அட...
"இந்த கட்டில் உனக்கு கடுமையாக இருக்குமே".. "நீ கட்டிலில் தூங்கு நான் உன் மேல் தூங்குறேன்"
"சாப்பிட ஏதாச்சும் வாங்கவா".. "நீ சாப்பிடு நான் உன்னை சாப்பிடுறேன்"
இருவரும் வாய்த்தர்க்கப்பட்டு சண்டை பிடிக்கும் போது ஒரே நேரத்தில் இருவரும் பேசிக்கொள்ளும் வேறு வேறு வசனங்கள்... அருமை
இருவருக்கும் இடையிலான தேனிலவு பாடலில் சிகரட் புகை, சாம்பிராணி புகையை பின்னணியாக வைத்து காட்சிப் படுத்தி இருப்பது ஒவ்வொரு சீனும் அப்படி அழகு..
ரன்வீர் சிங்கை ஊர் தலைவன் ஆக்கிய பின்னர் அவர் அழுது கொண்டே கூறும் "நான் டான்.... I am Don.." ரொம்ப ரசிக்க வைக்கிறார் மனுஷன்...
பிரியங்கா சோப்ராவின் குத்தாட்டம், அவர் உடைகள், வயிறுக்கும் மார்புக்கும் இடையில் இருக்கும் டாட்டு... எல்லாமே ரசிக்க முடியுது.. அதை விட பின்னணியில் ஆடும் அத்தனை பிகரும் அம்சமாக இருக்கிறது....
தனது கௌரவத்துக்காக தீபிகாவின் மோதிர விரலை அவர் தாயார் வெட்டும் இடத்தில் தாயாரின் நடிப்பு செம என்றால் தீபிகாவின் அலட்சியத்தனமான நடிப்பு செமையா செம..
தனக்கு இன்னொரு கல்யாணம் பண்ண வீட்டார் ஏற்பாடு செய்யும் போது தீபிகா தன அண்ணியிடம் "நீங்களும் இன்னொரு திருமணம் செய்ய வேண்டும்" என கூறும் இடம் கைதட்டல்..
தனது தலைப்பாகையை கழட்டியதும் தீபிகா வீட்டுக்குள் குட்டி சூறாவளி போல் நுழைந்து ரன்வீர் போடும் சண்டை சூப்பர்...
நவராத்திரி பாடலுக்கு தீபிகா போடும் ஆட்டம்... அவரது உடலின் ஒவ்வொரு பாகமும் ஆடுகிறது.. (நான் வல்கரா சொல்லல)
தனது தாயார் படுக்கையில் இருக்கும் போது ஊர் தலைவியாக அவதாரம் எடுத்து தீபிகா போடும் கெட்அப் செம ஸ்மார்ட்...
இரண்டு பகுதிகளுக்குமான ஒப்பந்தம் போடும் இடத்தில் ரன்வீர் அழுது கொண்டே நடிப்பது நம் கண்ணிலும் கண்ணீரை வர வைக்கும்..
கிளைமாக்ஸ்ஸில் தீபிகாவும் ரன்வீர் சிங்கும் துப்பாக்கியை நீட்டியபடி கடைசியாய் அடிக்கும் கிஸ்.... அனுபவிச்சு நடிச்சிருக்காங்கப்பா.....
ஆக மொத்தம் "ராம்லீலா" ஒரு பூரண காதல் நிலா
-அனோஜன்
No comments:
Post a Comment