என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Thursday, January 10, 2013

நீரைச் சேமிப்பது எமது வீடுகளிலேயே ஆரம்பமாகின்றது....../././


சாதாரணமாக ஒரு நகர்ப்புற  வீட்டுக்குரிய நீர்ப்பாவனயானது 20 - 24 அலகுகளாகும்.
அதாவது நீர்க் கட்டணமானது கிட்டத்தட்ட 350 - 550 ரூபாவாகும்.

உங்களது நீர்க் கட்டணமானது இதைவிட அதிகமாயின் நீர் உங்கள் வீட்டிலும் விரயமாகின்றது.
இதற்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த எம்மால் முடியுமா.??

விரயமாகும் நீரில்:
25-35 % குளியல் அறைகளிலும் 
20-25 % கழிவறைகளிலும் 
15-20 % துணி துவைக்கும் போதும் 
5-10 % சமையலறைகளிலும் 
விரயமாகின்றது.


சில எளிய நடைமுறைகள் நீரை சேமிக்க எமக்கு உதவுகின்றன. 

குளியல் அறை 


25-35 % வரையான நீர் குளியல் அறைகளில் விரயமாகின்றது.
குளியல் அறைகளில் காணப்படும் Shower மற்றும் Basin மூலமாகவே அதிகளவு நீர் வீணாக்கப் படுகின்றது.

 
Pressure Control Valve ஒன்றை எமது Shower இல் பொருத்துவதன் மூலம் நிமிடத்துக்கு 12 லிட்டர் வரையான நீர் சேமிக்கப் படும்.


Water Efficient Shower-Head எனப்படும் வினைத்திறனுள்ள சாதனங்களின் மூலம் சாதாரண குளியளிக்காக செலவிடும் நீரில் 70% சேமிக்கப் படுகின்றது. ஒரு சாதாரண குளியலுக்கு நிமிடத்துக்கு 25 லிட்டர் நீர் தேவைப் படுகின்றது. Water Efficient Shower-Head மூலம் இது நிமிடத்துக்கு 9 லிட்டர் ஆக குறைக்கப்படுவதுடன் குளியலுக்கான திருப்தியும் கிடைக்கின்றது.


Tap-Aerator எனப்படும் சாதனத்தை எமது நீர்க் குழாய்களில் பொருத்துவதன் மூலம் 50% நீர் விரயமாதலில் இருந்து சேமிக்கப் படுகின்றது.

மேற்குறிப்பிட்ட சாதனங்கள் விலை மிகவும் குறைவு என்பது குறிப்பிட தக்கது..


துணி துவைக்கும் போது.

15-20% வரையான நீர் இதன் போது விரயமாகின்றது.
Washing Machine மூலம் துவைக்கும் போது முழு அளவு (Full Load) மற்றும் அதில் குறிப்பிட்டளவு நீர்ப் பயன்பாடு என்பன நீரை சேமிக்கும் வழிகள் ஆகும்.
மேலும் பழைய Washing Machines வினைத்திறன் குறைந்தவை ஆகும். புதிதாக Washing Machine வாங்குவோர் முன்னால் திறந்து மூடும் (Front Loader) வகையான Machines வாங்குவது கூடுதல் பலன் தரும்.

கைகளினால் துணி துவைக்கும் போது 2 வாளிகளைப் பயன்படுத்துதல் நீரை சேமிக்க உதவும். மேலும் திறந்த குழாயில் வாளிகளை வைத்து துணி துவைத்தல் நீர் விரயமாதலை அதிகப்படுத்தும்.

சமையல் அறை 


5-10% நீர் மட்டுமே சமையல் அறையில் விரயமாகினாலும் சில செயற்பாடுகள் மூலம் இதையும் குறைத்து கொள்ள முடியும்.

குளியல் அறை போன்றே Tap-Aerator சாதனத்தை எமது நீர்க் குழாய்களில் பொருத்துவதன் மூலம் 50% நீர் விரயமாதலில் இருந்து சேமிக்கப் படுகின்றது.
மரக்கறி மற்றும் சமையல் சாதனங்களை கழுவும் போது திறந்த குழாயில் கழுவாமல் தண்ணீரை பிடித்து வைத்து கழுவுவதால் சில லிட்டர் தண்ணீரை மீதப்படுத்தலாம். 

கழிவறை (Toilets)

எமது நீர்ப் பாவனையில் கிட்டத்தட்ட 20% கழிவறையில் விரயமாக்கப் படுகின்றது.
ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு 30 லிட்டர் நீர் கழிவறைக்கு தேவைப் படுகின்றது.


DUAL FLUSH SYSTEM Toilets இல் ஒரு பாவனைக்கு கிட்டத் தட்ட 7 லிட்டர் நீர் சேமிக்கப் படுகின்றது. இதிலுள்ள Full Flush இற்கு 4.5 லிட்டர் நீரும் Half Flush இற்கு 3 லிட்டர் நீருமே தேவைப்படுகின்றது. பழைய Cisterns இல் இதே தேவைக்கு 12 லிட்டர் நீர் தேவைப் பட்டது. 


கழிவறைக்கு பிரத்தியேகமாக மழை நீர் சேகரித்து பயன் படுத்துவதன் மூலம் குடிநீர் விரயமாதலை தடுக்கலாம். (RAIN WATER HARVESTING SYSTEM)
மழை நீர் சேகரிப்பு தாங்கியில் இருந்து கழிவறை நீர் விநியோக குழாய்க்கு இணைப்பு வழங்குவதன் மூலம் மழை நீர் இல்லாத நாட்களில் நீர் விநியோகத்தை உறுதிப் படுத்தலாம். 

சில ஆலோசனைகள் 

திறந்த குழாயில் பல் துலக்குவதன் மூலம் 1.6 லிட்டர் நீர் நிமிடத்திற்கு விரயமாகின்றது.
ஒரு குவளை நீரில் Brush ஐ கழுவி துலக்குவதன் மூலம் நீரை சேமிக்கலாம் 


குளியல் நேரத்தை குறைப்பதால் அதாவது வீணாக Shower இல் நிற்பதை குறைப்பதால் நீர் விரயமாதலை ஓரளவு குறைக்கலாம்.

ஒரு Leaking Tap இலிருந்து ஒரு நாளைக்கு கிட்டத் தட்ட 30-200 லிட்டர் நீர் விரயமாகும். எனவே உடனடியாக ஒழுகும் நீர்க் குழாய்களை திருத்துதல் வேண்டும்.

Leaking Toilet Cisterns மூலம் நாளுக்கு கணிசமான அளவு நீர் விரயமாகின்றது. (Cistern இல் சில துளி Ink விடும் போது அது Commode இல் கசிவதை வைத்து Leak ஐ கண்டறியலாம்)
வீடு கழுவும் போது Hose பயன்படுத்துவதை தவிர்த்து Mobber பயன்படுத்துவதால் நீர் விரயமாவதை குறைக்கலாம்.


SAVING WATER STARTS AT OUR HOMES....././.



No comments:

Post a Comment