தயட்ட கிருல்ல அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய நோக்கம் யாதெனில் ஒவ்வொரு வருடமும் இலங்கையின் சில குறிப்பிட்ட பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதேயாகும். இதற்கான திட்டங்கள் அனைத்துமே குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையான மக்கள் நன்மையடைவதே ஆகும். தயட்ட கிருல்ல திட்டமானது 2013 ஆம் வருடத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நடைபெற உள்ளது. தயட்ட கிருல்ல தேசிய கண்காட்சியானது 2013 பெப்ரவரி நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை அம்பாறை கொண்டவட்டுவான் பிரதேசத்தில் நடைபெற உள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பங்கு தயட்ட கிருல்ல - 2013 திட்டத்தில் என்ன என்பதை பார்க்கலாம்.
கொண்டவட்டுவான் பிரதேசம் :
அம்பாறை நகரில் இருந்து 4km தூரத்தில் அமைந்துள்ளது. நீர் சுத்திகரிப்பு நிலையம், ஹார்டி தொழிநுட்பக் கல்லூரி, இராணுவ பயிற்சிப் பாடசாலை மற்றும் பல அரச திணைக்களங்கள், அரச விடுதிகள் இந்த பிரதேசத்திலேயே அதாவது தயட்ட கிருல்ல தேசிய கண்காட்சி இடம்பெறப் போகும் இடத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளன.
தயட்ட கிருல்ல க்கான நீர் வழங்கல் பிரதேசம் :
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நோக்கம் :
- கண்காட்சிப் பிரதேசம் மற்றும் அதை சூழவுள்ள இடங்களுக்கு நீர் வழங்கல்.
- திருகோணமலையில் இடம்பெறும் 2013 சுதந்திர தின விழாவுக்கு நீர் வழங்கல்.
- அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் நடமாடும் நீர் வழங்கல் சேவை.
- ஏற்கனவே உள்ள நீர் வழங்கல் திட்டங்களின் அபிவிருத்தி.
- பயன்பாடற்ற குழாய் கிணறுகளை திருத்துதல்.
- கிராமிய நீர் வழங்கல் திட்டங்களின் அபிவிருத்தி.
- புதிய கிராமிய நீர் வழங்கல் திட்டங்கள்.
- மக்களிடையே நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் தொடர்பான விழிப்புணர்வு.
தயட்ட கிருல்ல - 2013 கண்காட்சி
- ஒரு நாளைக்கு குறைந்தது 500,000 பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.
- குடி நீர் தேவை ஆனது ஒரு நாளைக்கு 2000 கன மீட்டர்கள்.(2000 m3/day)
- மக்களிடையே குடி நீர் தொடர்பான விழிப்புணர்வு.
தயட்ட கிருல்ல - 2013 கண்காட்சிக்கான PIPE NETWORK
ஏற்கனவே இருக்கும் WATER SUPPLY NETWORK க்கான அபிவிருத்தி திட்டங்கள்...
அம்பாறை மாவட்டம் :
- அம்பாறை, சம்மாந்துறை, பதியத்தலாவ, மருதமுனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சாய்ந்தமருது, கல்முனை Water Supply System க்கான புனருத்தாரனம்.
- கிராமிய நீர் வழங்கல் திட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள்.
மட்டக்களப்பு மாவட்டம் :
- ஏறாவூர், செங்கலடி, இருதயபுரம், காத்தான்குடி, ஆரயம்பதி, கல்லடி, வவுணதீவு, களுவாஞ்சிகுடி, கல்லாறு மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களுக்கான Water Supply System க்கான புனருத்தாரனம்.
- கிராமிய நீர் வழங்கல் திட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள்.
திருகோணமலை மாவட்டம் :
- சேருவில, கந்தளாய், கிண்ணியா, திருகோணமலை நகர், ஆண்டான்குளம் போன்ற பிரதேசங்களில் Water Supply System க்கான புனருத்தாரனம்.
- கிராமிய நீர் வழங்கல் திட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள்.
பொலன்னறுவை மாவட்டம் :
- கலெல்ல நீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் இருந்து மன்னம்பிட்டிய Sump வரையிலான நீர் குழாய் புனருத்தாரனம்.
- மன்னம்பிட்டிய பிரதேசத்தில் Water Distribution System க்கான புனருத்தாரனம்.
- செவனப்பிடிய, வெலிகந்த பிரதேசத்தில் Water Distribution System க்கான புனருத்தாரனம்.
- கடவதமடுவ, ஹிகுரக்தமன, டிம்புலுகல Water Distribution System க்கான புனருத்தாரனம்.
- கிராமிய நீர் வழங்கல் திட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள்.
- சிறுநீரக கோளாறு கூடிய இடங்களில் விழிப்புணர்வு திட்டங்கள்.
அபிவிருத்தித் திட்டத்தின் மாதிரி வரைபடம் :
தயட்ட கிருல்ல - 2013 கண்காட்சிக்கான பிரிவுகள் :
- தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை மற்றும் அமைச்சின் புகைப்படத் தொகுப்பு.
- சுகாதார வசதிகள்
- நீர் வளங்களின் அறிமுகம்
- பயன்பாட்டிலுள்ள நீர்வழங்கல் திட்டங்கள் பற்றிய அறிமுகம்.
- எதிர்கால திட்டங்கள்.
- கொண்டவடுவான் நீர் சுத்திகரிப்பு நிலையம் பற்றிய அறிமுகம் மற்றும் மாதிரி.
- நீர் பரிசோதனை மற்றும் ஆய்வுகூட அறிமுகம்.
- நீர் கட்டண முறை பற்றிய விளக்கம்
- மழை நீர் சேகரிப்பு திட்டம்.
- நீர்ப் பாதுகாப்பு.
மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்காக பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இப்போ மேட்டர் என்ன னா இதுல FUTURE DEVELOPMENT PLANS பற்றிய கண்காட்சி தொகுப்பிற்கு உரிய பொறுப்ப,, நான் ஒரு மனுஷன் னு என்ன நம்பி ஒப்படைச்சிருக்காங்க..... அட நான் தான் அடுத்த மாசம் எஸ்கேப் என்கிறது இந்த பயபுள்ளைகளுக்கு தெரியல..... ஆக மொத்ததுல தயட்ட கிருல்ல - 2013 கண்காட்சி ல FUTURE PLAN... கோவிந்தா ........... அதுக்கு முதல்.... மரியாதையா Transfer பண்ணி தொலயுங்களேன் டா.......
கடுப்புடன்
-அனோஜன்
No comments:
Post a Comment