என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Thursday, October 3, 2013

நூதன திருட்டு....././

இது இன்று கேள்விப்பட்ட விடயம். கேட்டதும் அதிர்ந்து போனேன். இவ்வளவு நாட்களாக நாம் இவ்வாறு யோசிக்கவில்லையே என்று கவலையும் கூட.. தொழினுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் பணத்திற்கு பதிலாக பலவித நுட்பங்கள் பாவிக்கப் பட்டு வருகின்றன. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் பேமன்ட் போன்றன ஒருபுறம்... இது தவிர தங்களின் நிறுவனங்களுக்குள்ளே பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் சில கார்டுக்களும் இருக்கின்றன. நோ லிமிட் கார்டு, ஆர்பிகோ லோயல்டி கார்டு போன்றவை சில உதாரணங்கள். இதை பாவித்து மிக நூதனமாக ஒரு திருட்டு நடத்தப் பட்டுள்ளது. நூறுகள், ஆயிரங்கள் அல்ல மூன்று மாதத்தில் எந்தவித முயற்சியும் செய்யாமல் ரூபாய் மூன்று லட்சத்திற்கும் மேல். எவ்வாறு....???




டயலாக் கையடக்க தொலைபேசி வலையமைப்பிலே பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறிய பரிசு/ நன்மை "ஸ்டார் பொயின்ட்ஸ்".... நாம் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தும் போது நமக்கு எண்பது சதம் கழிவாக கிடைக்கும். அநேகமானோர் இதை கவனிப்பதில்லை. ஸ்டார் பொயின்ட்ஸ் மூலம் டயலாக் பில் செலுத்துதல், டயலாக்கில் கழிவு விலையில் பொருள் கொள்வனவு போன்றன மட்டுமின்றி டயலாக்கினால் தெரிவு செய்யப்பட சில இடங்களில் பொருள் கொள்வனவும் செய்யவும் முடியும்.



ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை செய்யும் அநேகமான ஊழியர்களுக்கு அவர்களின் கையடக்க தொலைபேசி கட்டனத்திற்காக ஒரு சலுகை வழங்கப்பட்டது... அவர்களுக்கு வரும் பில்லில் ரூபாய் ஐநூறு நிறுவனத்தினால் செலுத்தப்படும். இந்த சலுகை காரணமாகவே அனேகமாக எல்லா ஊழியர்களும் "டயலாக்" வலையமைப்பையே இந்த நிறுவனத்தில் பாவிக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள நிலையங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு இந்த சலுகை மாதம் தவறாமல் கிடைத்து வந்திருக்கிறது.

சமீபத்தில் இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற போது தனது கையடக்க தொலைபேசியை "ரோமிங்" வசதியை செயல்படுத்தி பாவித்திருக்கிறார். ரோமிங் வசதிக்கு சாதாரண கட்டணங்களை விட பல மடங்கு கட்டணங்கள் அறவிடப்படும். இந்த நபர் நாடு திரும்பியதும் தனது கட்டணத்தை செலுத்தியபின் தன் "ஸ்டார் பொயின்ட்ஸ்" எத்தனை இருக்கிறது என பார்க்கும் போது அவருக்கு நூறு பொயின்ட்ஸ் மட்டுமே காட்டப் பட்டிருக்கிறது. தொழிநுட்ப கோளாறு காரணமாக இருக்கும் என டயலாக் வாடிக்கையாளர் நிலையத்தை அணுகியவருக்கு அதிர்ச்சி.......



தனது "ஸ்டார் பொயின்ட்ஸ்" அனைத்தையும் இன்னொரு இலக்கத்திற்கு மாற்றீடு செய்யும் படி இவர் கையொப்பமிட்டுள்ளார். அந்த இலக்கத்தை குறித்தெடுத்து பரீசலிக்கும் போது அது அந்த நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி கட்டணங்களை கண்காணிக்கும் மேலதிகாரியின் இலக்கம்... அலுவலகத்திற்கு விரைந்து ஏனைய ஊழியர்களிடமும் விடயத்தை கூறி பார்க்கும் போது அனைவருக்கும் நூறு "ஸ்டார் பொயின்ட்ஸ்" மட்டுமே காணப்பட்டது..... அனைவரும் டயலாக் வாடிக்கையாளர் சேவையை நாடிய போது எல்லா ஊழியர்களினதும் ஸ்டார் பொயின்ட்ஸ் அந்த குறிப்பிட்ட மேலதிகாரியின் இலக்கத்திற்கே மாற்றீடு செய்யப் பட்டிருந்தது..... 

என்ன நடந்தது என பார்க்கும் போது..... தங்களுக்கான கையடக்க தொலைபேசி கட்டணங்களை பெற்றுக்கொள்ள ஊழியர்கள் படிவங்களை பூர்த்தி செய்யும் போது அனைத்து படிவங்களிலும் கையொப்பங்களை பெற்ற பின்னர் தனது இலக்கத்திற்கு ஸ்டார் பொயின்ட்ஸ் மாற்றீடு செய்யும் வகையில் பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார் அந்த மேலதிகாரி..... பின்னர் தனக்கு வந்து சேரும் ஸ்டார் பொயின்ட்ஸ் மூலம் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்... இதன் மூலம் இவர் திருடியது கடந்த மூன்று மாதங்களில் மூன்று லட்சம் ஸ்டார் பொயின்ட்ஸ் க்கு மேல்.... (ஒரு ஸ்டார் பொயின்ட் ஒரு ரூபாய்)



தற்போது வேலையையும் இழந்து களவாடிய கட்டணங்களையும் செலுத்தும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்..... ரூம் போட்டு யோசிக்கிறது என்கிறது இது தான்.... அட இவ்வளவு பண்ணினியே இன்னொரு பினாமியோட இலக்கத்திற்கு மாத்தியிருந்தா தண்டனையாவது கொஞ்சம் குறைந்திருக்குமே....

நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்... மத்தவனுக்கு புரியப்படாது... தெரியப்படாது......././

No comments:

Post a Comment