கடந்த மே 31 ஆம் திகதி ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை கடந்த செவ்வாய் கொன்கோர்ட் திரையரங்கில் பார்க்க முடிந்தது. கரன் ஜோகர் தயாரிப்பு மற்றும் ரன்பீர் கபூர் இவர்கள் இருந்தாலும் நான் பார்க்க சென்ற ஒரே காரணம் செல்லம் தீபிகா படுகோன்..... வழமையான கரன் ஜோகர் படங்களின் சாயல் இருந்தாலும் 3 மணித்தியாலங்கள் சுவாரஸ்யமாக செல்கின்றன.
வழமையான காதல் கதை தான் என்றாலும் ஸ்க்ரீன் ப்ளே சான்சே இல்ல. தமிழில் இப்படி ஒரு கதையை கொடுத்தா நிச்சயமா சொதப்பிடுவாங்க.... நான்கு நண்பர்கள்.... Bunny, Avi, Aditi, Naina.... அவர்களிடையே நடக்கும் காதல், நட்பு, சண்டை, ஊடல், ஆட்டம், பாட்டம் இவை தான் இந்த திரைப்படம்.
நான் ரசித்த காட்சிகள்..
மாருதி டிக்சித் குத்தாட்டம் போடும் ஆரம்பப் பாடல்..... என்னா டான்சு.... இந்த வயசுலயும் எப்படி இருக்காங்க இவங்க.... Aja Nachle க்கு அப்புறம் மாதுரி டிக்சித்தை ரசிக்க முடிஞ்சுது...
ரன்பீர் கபூரின் லட்சியம்... எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து போய் விட்டது... உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் பார்க்க வேண்டும் என்பதை அவர் கூறும் பொது நமக்கும் அந்த ஆர்வம் வந்து விடுகின்றது...
ரயிலில் தண்ணியடித்துக் கொண்டே விளையாடும் அந்த விளையாட்டு..... செமயா இருந்திச்சு போங்க..... அதிலும் "I never watched Pooooorn"...... ஹா ஹா....
மனாலி எனும் இடத்தில் மலையேறும் காட்சிகள் அற்புதம்.... நம்மளையும் கூடவே ஏற வச்சிர்றாங்கப்பா....
பனி படர்ந்த மலையை அழகாய் படம் பிடித்திருக்கிறது கமெரா.... அதுவும் ரன்பீர் மற்றும் தீபிகா அந்த மலை உச்சியில் நின்று கத்தும் போது எனக்கும் அவர்களுடன் கத்தணும் போலவே இருந்திச்சு...
ஆவி கதையை கேட்டு ரன்பீர் அந்த மலைக்கு போவதும்.... பின்னால் சத்தம் கேட்டு பயப்படுவதும்.... செம பின்னணி இசை.... தியட்டரையே ஒரு செக்கண்ட் உலுக்கிட்டாங்க....
ரன்பீர் கையில் மணிக்கட்டுக்கு அருகே இருக்கும் அந்த Tattoo......
ரன்பீர் பிரிந்து போய் மீண்டும் ஜெய்ப்பூர் வரும் போது வரும் "Badtameez Dil" பாட்டுக்கு நிச்சயம் Once More கேட்க தோணும். அதேபோல் ஹோலி பண்டிகை நேரம் வரும் "Balam Pichkaari" பாடலும் செம....
திருமண வீட்டில் எதிர்தரப்பு நடனத்தை ரகசியமாக கண்காணிக்கும் சீன் சூப்பர்... அதிலும் நான் cheat பண்ண மாட்டேன் என ரன்பீர் சொல்லும் பொது "cheat பண்ணலைனா நீ இன்னும் Schhol யே இருந்திருப்ப" நு தீபிகா அடிக்கும் டைமிங் நச்...
நண்பர்கள் இருவரும் சண்டை பிடிக்கும் போது கண்ணாடி போத்தலால் வீசியதும் ரன்பீர் "கொல்ல பார்க்குறியா.. இந்த தலையணையால் வீசு.." என சொல்லும் போது தியட்டர் முழுதும் குபீர்..
நீச்சல் குளத்துக்கு அருகே வரும் கிஸ் சீன்... வாவ்... நமது உதடுகளும் நனைகின்றதே....
அதிதி யின் கணவராக வரும் அந்த கரக்ட்டர்..... கொடுத்த வேலைய செமையா பண்ணி இருக்காரு ஆளு....
ஜெய்ப்பூரில் ஒரு திருமண விழா எப்படி இருக்கும் என்பதை நாமும் அந்த திருமணத்திற்கு போன உணர்வுடன் சொல்லி இருக்கின்றார்கள்...
ரன்பீர் அவரது நண்பரிடம் உனக்கு நான் என்ன செய்யணும் என கேட்கும் பொது அவர் சொல்லும் "Drink With Me".... கண்ணுல தண்ணி..
ரன்பீர் மற்றும் அவரது தகப்பனாருக்கு இடையே நடக்கும் சம்பாஷணை...
ரன்பிரின் அம்மா சொல்லும் அந்த வசனம்... அப்படியே நெஞ்சில பதிஞ்சு போய் விட்டது...
"Live Your Life.... Listen to Your Heart"
கிளைமாக்ஸ் இல் டப்பு டப்பு என அடிக்கப்படும் கிஸ்கள்.... அட அட அட..
ஒரு செம சீரியஸ்ஸான சீன்லயும் காமடியா போற வசனங்கள்... சூப்பர்..
இது எல்லாத்தையும் விட எனக்கு பிடிச்ச விஷயம் படத்தில எல்லா விஷயங்களுக்கும் தண்ணி அடிக்கிறாங்க.... எல்லாருமே தண்ணி அடிக்கிறாங்க..... இங்க எப்போ இப்படி வர்றது .... இலங்கை எப்போ வல்லரசு ஆகுறது....
கடைசியில எல்லா ஹிந்தி படங்களை போலவே Happy Ending ....
ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி......
LIVE YOUR LIFE.....
LISTEN TO YOUR HEART.....
No comments:
Post a Comment