அண்மையில் வெளிவந்த ஆனந்த விகடன் சஞ்சிகையில் சுவிஸ் வங்கி பற்றிய ஒரு கட்டுரை நெளியாகி இருந்தது. சுவிஸ் வங்கி பற்றிய தெரியாத பல விடயங்களை இது தெளிவு படுத்தியது. ஆனந்த விகடனுக்கு நன்றிகள் மற்றும் இதை தவற விட்டவர்களுக்காக இவ்வலைப் பதிவு.
"சுவிஸ் பேங்க்" நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு வார்த்தை. ஊழல், கறுப்புப் பணம் இப்படியான எந்த வார்த்தைப் பிரயோகத்தின் போதும் சுவிஸ் பேங்க் எனும் சொல் இடம்பெறாமல் விடாது. காரணம் ரகசியங்களைப் பாதுகாக்கும் சுவிட்சலாந்து நாட்டின் சட்டம் பல கோடி பணத்தை இந்த வங்கியில் வைப்பு செய்ய தூண்டுகின்றது.
சுவிஸ் வங்கியில் எந்த நாட்டையும் சேர்ந்த 18 வயது பூர்த்தி ஆகிய எவரும் கணக்கு ஆரம்பிக்கலாம். புதிதாக வாடிக்கையாளர்களை சேர்க்கும் போது சுவிஸ் வங்கியானது மிகவும் கவனமாக இருக்கிறது (சும்மா பெயருக்கு தான்). பல கோடிகளை வைப்பு செய்து கணக்கு ஆரம்பிக்கும் எவருக்கும் கெடுபிடிகள் இருப்பதில்லை. கணக்கை ஆரம்பிப்பதற்கு எமது பாஸ்போர்ட் மாத்திரம் போதுமானது. ஆனால் பின்பு இருப்பிடத்தை உறுதி செய்ய தண்ணீர் அல்லது மின்சார பட்டியல், பொருளாதார பின்னணி பற்றிய ஆவணம், பண வருவாய் பற்றிய ஆவணம் போன்றவற்றை கையளிக்க வேண்டும். நேரில் சென்று கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதானால் 3 மணி நேரம் போதும். அனால் முக்கியமான விடயம் என்னவென்றால் கணக்கு ஆரம்பிப்பதற்கு ஆகக் குறைந்த தொகை நம் நாட்டு மதிப்பில் கிட்டத்தட்ட 150 கோடிகள் தேவை (ஸ்ஸ்சப்பா.... இப்பவே கண்ண கட்டுதே).
பணத்தை Deposit செய்ய கிரெடிட் கார்டு பயன்படுத்தி Third Party Payment முறையில் Deposit செய்யலாம். இந்த முறையில் பணத்தை யார் Deposit செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியாது. சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் கிடையாது என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.
சுவிஸ் வங்கியானது பாதுகாப்பிற்காக விரும்பப் படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ௧௫௦௫ முதல் சுவிட்சலாந்து வேறு எந்த நாட்டுடனும் போரிடுவது இல்லை என்பதால் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படுகின்றது. மேலும் சுவிஸ் தன்னுடைய பணப் பரிமாற்றத்துக்கு தங்கத்தை பின்னணியாக பயன்படுத்துவதால் உலக அளவில் நிலையான மதிப்புடைய பணமாக சுவிஸ் பணம் கருதப் படுகிறது. இதை விட இன்டர்நெட் பாங்கிங், சுலபமான முதலீட்டு வசதி, சிறப்பான வங்கி சேவை, எமது விடயங்கள் வெளியே போக வாய்ப்பே இல்லாத சூழ்நிலை போன்றவை அனைவராலும் சுவிஸ் வங்கி விரும்பப்பட காரணமாக சொல்லலாம்.
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் யாராவது இறந்து விட்டால் இறந்தவருடைய வாரிசு 10 ஆண்டுகளுக்குள் சுவிஸ் வங்கியை தொடர்பு கொண்டு ஆதாரங்களுடன் நிருபிக்க வேண்டும். இல்லையெனின் 10 ஆண்டுகள் முடிவில் கணக்கு செயலற்றதாகி விடும். கணக்கு வைத்திருக்கும் ஒருவர் எந்த ஒரு நேரத்திலும் தனது கணக்கை ரத்து செய்து கொள்ள முடியும். இதற்கு எந்த செலவுகளும் இல்லை. என்ன கோடிக்கணக்கில் பணம் என்பதால் ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம்.
சுவிஸ் வங்கி - பல கோடிகளின் பாதுகாப்புப் பெட்டகம்.
good job Ano... keep it up :-)
ReplyDeletethanks lathan...././
ReplyDeleteippidi adikkadi podunga brother.
ReplyDelete