தயட்ட கிருல்ல அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய நோக்கம் யாதெனில் ஒவ்வொரு வருடமும் இலங்கையின் சில குறிப்பிட்ட பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதேயாகும். இதற்கான திட்டங்கள் அனைத்துமே குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையான மக்கள் நன்மையடைவதே ஆகும். தயட்ட கிருல்ல திட்டமானது 2013 ஆம் வருடத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நடைபெற உள்ளது. தயட்ட கிருல்ல தேசிய கண்காட்சியானது 2013 பெப்ரவரி நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை அம்பாறை கொண்டவட்டுவான் பிரதேசத்தில் நடைபெற உள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பங்கு தயட்ட கிருல்ல - 2013 திட்டத்தில் என்ன என்பதை பார்க்கலாம்.
Tuesday, December 18, 2012
Thursday, December 13, 2012
எனது பார்வையில் சச்சினின் ஓய்வு .....
தம்மாதுண்டுகள் தொடக்கம் பல் விழுந்த பெருசுகள் வரை எல்லோருமே தற்காலத்தில் ஒருமுறையாவது பேசிக்கொள்ளும் விடயமாக மாறியிருக்கிறது கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன் ஆட்டம். அட சச்சினே இவ்வளவு யோசிச்சு இருக்க மாட்டார். நம்ம பயலுக சச்சினாவே மாறி பேசிக்கிறாங்க.
Wednesday, December 12, 2012
அரசாங்க உத்தியோகம் நல்லதா...?
இது என்னடா கேள்வி..? 100% ஆமா தானே அப்படீன்னு சொல்லலாம். ஆனா அந்த உத்தியோகம் எல்லாம் ஒழுங்காக செய்யப்படுகின்றதா ? இல்லை செய்யப்படும் வேலைக்கு தான் சம்பளம் கொடுக்கப்படுகின்றதா ? 100% ஆம் என்று யாராவது கூற முடியுமா ?
யாரு டா இவன் இதைப்பற்றி பெருசா பேச வந்துட்டான் என்று யோசிக்கலாம்...