தம்மாதுண்டுகள் தொடக்கம் பல் விழுந்த பெருசுகள் வரை எல்லோருமே தற்காலத்தில் ஒருமுறையாவது பேசிக்கொள்ளும் விடயமாக மாறியிருக்கிறது கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன் ஆட்டம். அட சச்சினே இவ்வளவு யோசிச்சு இருக்க மாட்டார். நம்ம பயலுக சச்சினாவே மாறி பேசிக்கிறாங்க. நம்ம விளக்கத்துக்கு வருவோம். நான் அறியாத வயசில் கிரிக்கெட் பார்க்க தொடங்கும் பொது 1995/1996 இருக்கும் எனக்கு முதலில் தெரிந்த கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் மட்டுமே. அந்த நேரத்தில் இந்திய அணியில் கொஞ்சம் உயரம் குறைவாக யார் வலது கை துடுப்பாட்டம் பண்ணினாலும் நான் சச்சின் என்றே நினைத்திருக்கிறேன்.
இன்று ஒரு வானொலி அலைவரிசையில் யாரை ஓய்வு பெற சொல்லலாம் என்று ஒரு நிகழ்ச்சி. பலர் சச்சினின் பெயரையே சொல்லி இருந்தார்கள். அதை கேட்கும் பொது தான் இதை பற்றி நாம கொஞ்சம் இங்க புலம்புனா என்ன என்று தோன்றியது. எல்லாவற்றுக்கும் வரலாறு முக்கியம் இல்லையா. முன்னொரு காலத்தில் சச்சின் தான் இந்திய அணி. இந்திய அணி என்றால் சச்சின் என்ற நிலை இருந்தது. இன்று ரோட்டு மூலையில் நின்று பேசும் எல்லோருக்கும் தெரியுமோ தெரியாது. அப்போதெல்லாம் சச்சின் அவுட் என்றால் இந்தியா அவுட் என்ற நிலைமை.
அட அதுக்கு இப்போ என்னங்குற நீ என்று கேட்கலாம்.... சரி நியாயம் தான்.... நம்ம மேட்டர் க்கு வருவோம்... சௌரவ் கங்குலி... இந்திய அணியின் முன்னாள் தலைவர்... கருத்து தெரிவித்திருந்தார்... சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று... சச்சின் நிலைமையில் தான் இருந்திருந்தால் கட்டாயம் ஓய்வு பெற்றிருப்பாராம்.... கங்குலி எனக்கு பிடித்த வீரர்... ஆனால் இந்திய அணி முதல் Kolkotta Night Riders வரை கங்குலி தானாக விலக வில்லை... விலக்கப்பட்டார்.... ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பின்னர் கூட அவரது இடத்தை யார் நிரப்பினார்கள் என்பது கேள்விக்குறியே...
சச்சினின் ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை.... மைதானத்தில் அதிகம் தடுமாறுகின்றார்... இதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும்.... ஒட்டு மொத்த இந்திய அணியே இப்போது தடுமாறிக் கொண்டு தானே இருக்கிறது... தங்கள் சொந்த மண்ணிலேயே இங்கிலாந்திடம் நன்றாக வாங்கிக் கட்டுகிறார்களே.... அப்போ மொத்த அணியே ஓய்வு பெற வேண்டும் என்று சொல்லி விடலாமா....
டோனி என்றொரு அதிரடி வீரர் இருந்தார்.... 3ஆம் இழக்க ஆட்டக்காரர்.... இலங்கைக்கு எதிராக 183 ஓட்டங்களை யாரும் மறக்க முடியாது.... தலைவர் ஆனா பிறகு எங்கே போனது அந்த அதிரடி... டோனி 6, 7 ஏன் 8ஆம் இழக்க ஆட்டக்காரராக கூட களமிறங்கி உள்ளார்... அட யாரு டா இவன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறான் என்று யோசிக்கலாம்.... அட எல்லாம் அரசியல் தான்.... டோனி க்கு தேவை இந்திய அணியின் வெற்றி.... அதற்காக அவர் பழையபடி ஆடவில்லை என்று யாரும் அவரை தூக்கவில்லையே.....
இதுவே இப்படி என்றால் 23 வருட அனுபவமுள்ள ஒரு ஆட்டக்காரர் களத்தில் இருக்கும் பொது மற்றவர்களுக்கு இருக்கும் உற்சாகம் எப்படி இருக்கும்.... சச்சினுக்காக சதம் அடித்தேன் என யுவராஜ், ரைனா, விராத் கொஹ்லி போன்றோர் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள். சச்சினுடன் ஆட்டத்தை ஆரம்பிப்பது பாரம் குறைந்தது போல உணர்கிறேன் என செஹ்வாக் சொல்லி இருக்கிறார்.... அனுபவத்தை அறிவுரையாக சொல்ல தான் Coach இருக்கிறாரே எனலாம்.. அது உண்மை.... ஆனால் ஆடுகளத்துக்குள்ளே அவசர முடிவெடுப்பதில் Coach அல்ல அணி தலைவரே செயற்பட வேண்டும்.... அவருக்கு பக்க பலமாக கிரிக்கெட்டின் பல பரிமாணங்களை பார்த்த ஒருத்தர் கூடவே இருந்தால்..... குழந்தை முகத்தை வைத்து கொண்டு சச்சின் அட்வைஸ் பண்ணுவதை மேட்ச் நடக்கும் பொது யாரும் கவனிக்க தவறி இருக்க மாட்டீர்கள்..... 23 வருட பயணம்.... பல மாற்றங்களை ஒரு போட்டியில் கொணரும்...
இன்று கூட இந்திய அணியுடன் ஆட்டம் ஆரம்பம் ஆக முதல் எதிரணி பந்து வீச்சாளர்களிடம் கேட்டால் அவர்கள் முதலில் குறி வைப்பது சச்சினின் விக்கெட் ஆக தான் இருக்கும்..... பந்து அருகே வந்த பின்னரே அதை எந்த திசையில் திருப்ப வேண்டும் என தீர்மானிப்பதில் சச்சின் கில்லாடி... அந்த திறமை இன்னும் அவரை விட்டு போக வில்லை என்பேன் நான்....
கடைசியில Moral என்னவென்றால் சச்சினின் ஓய்வை தீர்மானிக்கக் கூடியது சச்சின் மட்டுமே.... அதனால மாப்பு அவர பற்றி பேசுறவங்க பேக்கப்பு......
கடுப்புடன்
- அனோஜன்
MY ALLTIME FVRT HERO IS SACHUU
ReplyDeleteTNX FOR UR REVIEW GURU