என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Wednesday, December 12, 2012

அரசாங்க உத்தியோகம் நல்லதா...?

இது என்னடா கேள்வி..? 100% ஆமா தானே அப்படீன்னு  சொல்லலாம். ஆனா அந்த உத்தியோகம் எல்லாம் ஒழுங்காக செய்யப்படுகின்றதா ? இல்லை செய்யப்படும் வேலைக்கு தான் சம்பளம் கொடுக்கப்படுகின்றதா ? 100% ஆம் என்று யாராவது கூற முடியுமா ? 


யாரு டா இவன் இதைப்பற்றி பெருசா பேச வந்துட்டான் என்று யோசிக்கலாம்... நானும் ஒரு அரசாங்க உத்தியோகத்தனே... காலையில் 8.15 க்கு வந்து கையெழுத்து போட்டு மாலை 4.15 ஆனால் off ஆஹி வீட்டுக்கு ஓடும் பல உத்தியோகத்தர்களில் நானும் ஒருவனே. இடையிலிருக்கும் அந்த 7 மணி 45 நிமிடங்களில் என்ன செய்து கிழித்தாய் என்று வீட்டுக்கு போய் கேட்டால் .... ம்ம்ம்மம்ம்ம்ஹ்ம் ....... 

எப்பவாவது ஒரு வேலை வரும்... அதை அவசர அவசரமாக பண்ணி விட்டு மிகுதி நேரம் facebook, twitter, youtube, film download இப்படி எதாச்சும் பிரயோசனமாக பண்ணுவது என் வேலை.... அதாவது இந்த post கூட office ல இருந்து தான் பண்றேன்.....

சில நேரம் எனக்கே என் மீது கோபம் வரும். இப்போ ஒழுங்கா வேலை பண்ணாம 50 வயசுலயா நீ பண்ண போறே என்று.... ஏன் என்றால் இதற்கு முதல் நான் வேலை பார்த்த தனியார் கம்பெனியில் 7.30 முதல் 5.00 மணி வரை சும்மா இருக்க நேரம் இல்லை. அட ரொம்ப நேரமா வேலை பார்க்குறோமே கொஞ்சம் தலைய அப்பிடி இப்பிடி ஆட்டலாம் என்றால் கூட ஒரு ஜப்பான் காரன் வேலை முடிஞ்சுதா என்று அடுத்த target உடன் ரெடி ஆக இருப்பான்.

அங்கு அப்பிடி வேலை பார்த்து விட்டு அரசாங்க வேலை என்றவுடன் மாறி வந்தாச்சு. நல்ல சம்பளம், நிறைய நன்மைகள், வாகனம், மரியாதை, etc, etc...எல்லாம் இருக்கு ..... but பண்ணுவதற்கு வேலை இல்லை. எனக்கு தரப்படும் சம்பளம் மக்களின் வரிப்பணத்தில் தரப்படுகின்றது. நான் பெரிசா எதையுமே பண்ணி கிழிக்க வில்லையே எனக்கு எதுக்குடா சம்பளம் என்று என்னையே நான் பல முறை கேட்டாச்சு ... 


அட என்ன விடுங்க .... நான் எனக்கு கிடைக்கும் சம்பளத்த சந்தோஷமா வாங்கிக்கலாம்.... ஏன்னா எனக்கு முன்னுக்கு இருக்கும் cabin ல ஒருத்தர் இருக்கிறார்.. நானும் வேலைக்கு வந்து ஒரு 3 மாசம் ஆச்சு ... அவர் பெயர் என்ன என்று கூட எனக்கு தெரியாது... அவர் pen எடுத்து நான் பார்ப்பது on மற்றும் off sign பண்ண மட்டும் தான்... மிகுதி நேரம் தூங்கிட்டு இருப்பார். இடைக்கிடையே போய் தம் அடிச்சிட்டு வருவார். இவர எதுக்கு வச்சிருக்கிறாங்க என்று எனக்கு இன்னும் புரியல..... 

அட எதுக்கு டா இதெல்லாம் இங்கே வந்து எழுதிறாய் என்று கேட்கலாம்.. என்ன பண்றது இதெல்லாம் பத்திரிக்கை ல எழுத நான் ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடேகர் கிடையாது. ஏதோ transfer apply பண்ணி இருக்கிறேன். கிடைச்சா colombo ல போய் கொஞ்சம் வேலை செய்திட்டு அப்டியே எதையாச்சும் படிக்கலாம். ( அங்க வேலை இருக்கிறதா கேள்வி)..

இப்போ concept  என்னவென்றால் வேலை செய்ய துடிக்கும் ஒருத்தனை வேலை இல்லாத இடத்தில் வச்சிட்டு என்னத்தய்யா புடுங்குறீங்க.? தயவு செய்து transfer பண்ணி தொலையுங்களேன்  டா....../././ 

கடுப்புடன் - அனோஜன் 
heading க்கும் concept க்கும் சம்பந்தமே இல்லையே என்று நீங்கள் தலையில் அடிச்சு கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல...././

No comments:

Post a Comment