என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Friday, June 14, 2013

அம்மாவுக்கு சேவை நலன் பாராட்டு விழா

கடந்த 10 ஆந் திகதி (10.06.2013) அன்று எங்கள் வீட்டில் (கல்முனையில்) காலை வேளை எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். அன்று தான் அம்மாவுக்கு கல்முனை ராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதுக்காக பாடசாலையால் நடாத்தப்படும் "சேவை நலன் பாராட்டு விழா".... நானும் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே சொல்லியாகி விட்டதால் அன்று லீவு போட்டு வந்து விட்டேன். குடும்பத்தில் எல்லோரையும் அழைத்திருந்தார்கள். வீட்டிற்கு கார் அனுப்பி அவர்களே வந்து அம்மாவை அழைத்துச் சென்றார்கள்... 



Thursday, June 6, 2013

YEH JAWAANI HAI DEEWANI - எனது பார்வையில்


கடந்த மே 31 ஆம் திகதி ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை கடந்த செவ்வாய் கொன்கோர்ட் திரையரங்கில் பார்க்க முடிந்தது. கரன் ஜோகர் தயாரிப்பு மற்றும் ரன்பீர் கபூர் இவர்கள் இருந்தாலும் நான் பார்க்க சென்ற ஒரே காரணம் செல்லம் தீபிகா படுகோன்..... வழமையான கரன் ஜோகர் படங்களின் சாயல் இருந்தாலும் 3 மணித்தியாலங்கள் சுவாரஸ்யமாக செல்கின்றன.

Wednesday, June 5, 2013

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கான கழிவு நீர் வெளியேற்றல் செயற்றிட்டம்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் செயற்படுத்தப்படும் மற்றுமொரு பயனுள்ள செயற்றிட்டம் இதுவாகும். இதிலே பின்வரும் பிரதான செயற்பாடுகள் முக்கியமானவை.

  • ஏற்கனவே இருக்கும் கழிவு நீர்க் குழாய்களின் புனரமைப்பு 
  • புதிய Pump House கட்டுமானம் 
  • இரசாயன கழிவுகளுக்கான தனியான கழிவு நீர்க் குழாய்கள்
  • புதிய Pump களை பொருத்துதல்