என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Thursday, July 18, 2013

கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம்

திட்ட விபரம்:

உள்ளடங்கும் சனத்தொகை : 40,000
திட்டத்திற்கான செலவு : 1,655 மில்லியன் 



உள்ளடங்கும் பிரதேசங்கள் :
  • கரைச்சி
  • விவேகானந்த நகர்
  • உதய நகர் தெற்கு
  • உதய நகர் வடக்கு
  • ஆனந்தபுரம்
  • தொண்டைமாநகர்
  • கனகாம்பிகை குளம்
  • இரத்தினபுரம்
  • கிளிநொச்சி நகரம்
  • மருதநகர்
  • கனகபுரம்
  • திருநகர் தெற்கு
  • திருநகர் வடக்கு
  • கணேசபுரம்
  • அறிவியல் நகர்
  • பொன்னகர்
  • மலையாளபுரம்
  • பாரதிபுரம்
  • கிருஷ்ணபுரம்
  • விநாயகபுரம்
  • அம்பாள் குளம்.

உற்பத்தியின் அளவு : 3,000 கன மீற்றரில் இருந்து 

நீர் பெறும் இடம் : கிளிநொச்சி குளம், இரணைமடு குளம் 

நிதியுதவி : இலங்கை அரசாங்கம் மற்றும் ஜப்பானிய அரசாங்கம்.

கிளிநொச்சி மக்களுக்கான நீர்வழங்கல் திட்டத்தின் புனரமைப்பு வேலைகள் கடந்த 16ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டமானது பின்னர் வாட மாகாணம் முழுவதுக்குமான நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கான அத்திவாரமாக இருக்கும். யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர்வழங்கல் திட்ட வேலைகளும் தற்போது ஓரளவு ஆரம்பிக்கும் கட்டத்தை எட்டியுள்ளது. 

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயற்றிட்டம் சவால்களுக்கு அப்பால் பல அனுகூலங்களை பெற்றுதரவுள்ளது.

கிளிநொச்சி நகரில் யுத்தத்தின் போது உடைந்து விழுந்த நீர்த்தாங்கி 

எது எப்படியோ.... இனி கிளிநொச்சி பக்கம் போகும் நம்ம பயலுகள் மினரல் வாட்டர் க்கு காச கொடுக்க தேவையில்லை.......

No comments:

Post a Comment