என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Tuesday, July 16, 2013

SEETHAMMA VAKITLO SIRIMALLE CHETTU- எனது பார்வையில்.....



நான் தெலுங்கு படங்கள் பார்க்கத் தொடங்கி ஒரு 4/5 வருஷம் தான் இருக்கும். அல்லு அர்ஜுன் படங்களுக்கு நான் அடிமை. மகேஷ் பாபு படங்களுயும் ரசித்து பார்ப்பேன். தெலுங்கு படம் என்றாலே ஆக்ஷன் மசாலா தானே. 3 மணித்தியாலங்கள் ஓடினாலும் விறுவிறு என்று நகரும் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்று. தமிழ் ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்கள் போலவே என்பதற்கு சிங்கம் 2 வின் வெற்றி ஒரு உதாரணம். 


SEETHAMMA VAKITLO SIRIMALLE CHETTU 2 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் திரைக்கதையில் வழமையான தெலுங்கு சினிமாவின் கோட்பாடுகளை உடைத்தெறிந்து அழகான ஒரு குடும்பச் சித்திரமாக என்னை கட்டிப் போட்டிருந்தது. வெங்கடேஷ், மகேஷ் பாபு என தெலுங்கு சினிமாவின் இரண்டு பெரிய ஆக்ஷன் ஹீரோக்கள் இருந்தும் சொல்லிக்கொள்ளும்படி ஒரு சண்டைக்காட்சி இல்லை இத்திரைப்படத்தில்... இருந்தும் படம் செம விறுவிறுப்பாகப் போகின்றது. இந்த அழகான குடும்பக் கதையில் பாடல்களைக் கூட forward பண்ண தோணலையே.... 


படத்தின் கதையோ ரொம்ப சிம்பிள்... ரேலங்கி எனும் ஊரில் ஆரம்பிக்கிறது கதை.... பிரகாஷ்ராஜ் (ரேலங்கி மாவைய்யா) ஊரில் அனைவருடனும் சந்தோஷமாகக் கதைத்துப் பழகும் நடுத்தரக் குடும்பக்கரர். இவர் மனைவி ஜெயசுதா.. மூத்த மகன் வெங்கடேஷ் (பெட்டொலு), இளைய மகன் மகேஷ் பாபு (சின்னொலு)... இவர்களின் தங்கை அபிநயா.... இவர்களுடன் வீட்டில் பாட்டியும் இருக்கிறார். பிரகாஷ்ராஜ்ஜின் மருமகள் அஞ்சலி (சீதா). சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து இவர்களுடனேயே வசிக்கிறார்.... இந்த குடும்பத்தின் உறவுக்கார குடும்பம் விஜயவாடா மனுஷுலு குடும்பம். பிரகாஷ்ராஜ் நடுத்தரக் குடும்பம் என்பதையும்  பிள்ளைகள் இருவருக்கும் வேலை இல்லை என்பதையும் அடிக்கடி குத்திக்காட்டுபவர். இவர்களின் கடைசி பெண் கீதா (சமந்தா). சமந்தாவும் மகேஷ் பாபுவும் லவ் பண்றாங்க. அப்பாடா...... இது தான் சுருக்கமான கேரக்டர் தொடர்பு. (எனக்கே குழம்பி போச்சே)

இவர்களுக்கு இடையில் நடக்கும் மகிழ்ச்சி, கோபம்,கும்மாளம், குறும்பு, கவலை, மனஸ்தாபம், ஈகோ இதெல்லாம் மட்டுமே இந்த படம். முக்கியமான மேட்டர் என்னன்னா படத்துல வில்லன் அப்படீன்னு யாருமே கிடையாது...

நான் ரசித்த காட்சிகள்....

அஞ்சலிய ரொம்பவே ரசிக்க முடியுது.... தமிழ்ல ஏன்பா இந்த புள்ள அழக குறைச்சி காட்டுறீங்க... செம அழகா இருக்கா அஞ்சலி.


வெங்கடேஷ், மகேஷ் பாபு ஆடும் முதல் பாட்டு.... நல்லா இருக்கு வித்தியாசமான லொகேஷன், வித்தியாசமான ஸ்டெப்ஸ் இரண்டையும் நல்லா இணைச்சிருக்காங்க.

வெங்கடேஷ் சட்டை காலரை தூக்கி விடுவதும் மகேஷ் பாபு சட்டையின் முன் பக்கத்தை தூக்கி சுண்டுவதும் செம ஸ்டைல்...

வெங்கடேஷ் "ஏய்..." னு கூப்பிட்டதும் அஞ்சலி குடு குடுன்னு ஓடுவது ரசிக்க வைக்கிறது.

மகேஷ் பாபுவிடம் ஒரு பிகர் வந்து ப்ரொபோஸ் பண்ணதும் முடிய விரிச்சு போட்டா பூவ எங்க வைப்பேன்னு கேட்டு நோஸ் கட் பண்ணும்போது நாம ஒரு அப்ளிகேஷன் போடலாமான்னு தோணுது...

"பொண்ணுங்கள இம்ப்ரெஸ் பண்ணவா தம் அடிக்கிறே" ன்னு சமந்தா கேட்கும் பொது மகேஷ் பாபு கொடுக்கும் எக்ஸ்ப்ரெஷன்.... அட இவ்ளோ நாள் இத காட்டவே இல்லியே தலைவா...

மகேஷ் பாபு அவரது பாட்டியுடன் குறும்பு பண்ணி விளையாடும் பொது நமக்கு இப்படி ஒரு பாட்டி இல்லியேன்னு கண்டிப்பா தோணிச்சுங்க...

வெங்கடேஷ், மகேஷ் பாபு ஒண்ணா வரும்போது அவங்க அம்மா நிறுத்தி சுத்தி போடுவா... நம்ம கண்ணே பட்டிருக்கும் போல தான்...

மகேஷ் பாபு சென்சஸ் எடுக்க வந்தவரிடம் அஞ்சலியை மறந்து விட்டு விட அஞ்சலி அழும் காட்சி செமையா எடுத்திருக்காங்கபா...  

சாப்பிடும் போது சண்டை போடும் வெங்கடேஷ், மகேஷ் பாபு... அடுத்த சீன்லையே ரயில் நிலையத்தில் வைத்து எனக்கு போக மனசு இல்ல என்று மகேஷ் பாபு திரும்பி வரும்போது சமாதானமாவது கண்ணுல தண்ணிய வரவைக்கும்.

சமந்தா...... நான் என்னத்த சொல்ல... அழகு சிலை...


அபிநயா திருமண நேரம் வரும் சண்டையால் மகேஷ் பாபு பூந்தொட்டியை உடைத்து விட அடுத்த நாளே வெங்கடேஷ் போன் போட்டு பூந்தொட்டியை ஏன் உடைச்சேன்னு கேட்கும் போது மனசு இளகி போச்சு பா....

வெங்கடேஷ் மகேஷ் பாபுவுடன் ஹைதராபாத் வரும்போது மகேஷ் பாபு பிரண்ட்ஸ் "மச்சி தம் இருக்கா" னு  கேட்டு மகேஷ் பாபுவை கலாய்ப்பது... செம..

மகேஷ் பாபுவை பார்க்கும் போதெல்லாம் அந்த சின்ன பொண்ணு திரும்ப திரும்ப கூப்பிட்டு அழகை ரசிப்பது நம்மை ரசிக்க வைக்கிறது..

அஞ்சலியை பெண் பார்க்க வந்திருக்கும் பொது வெங்கடேஷ் உள்ளேயிருந்து "ஏய்.." னு கூப்பிடும் போது அஞ்சலி ஓடிவரும் காட்சி... அட போட வைக்கிறது..

கோவிலில் மின்கம்பம் சரிந்து ஏற்படும் அமளி துமளியின் இறுதியில் பிரகாஷ்ராஜ் சில வார்த்தை பேசுவதும், சகோதரர்கள் இருவரும் சேர்வதும், அவங்க கண்ணுல தண்ணி வரும் போது நமக்கும் கண்ணு ஈரமாகுதே... பின்னிட்டாங்க பா...

முதன் முறையாக "சீதா.." அப்படீன்னு அஞ்சலியை வெங்கடேஷ் கூப்பிடும் போது அஞ்சலியை விட வெங்கடேஷ் அதிகம் வெட்கப்படுகிறார்....


ஆக மொத்தம் தெலுங்கு சினிமான்னாலே டாட்டா சுமோ, அருவா, துப்பாக்கி, பஞ்ச் டயலாக், ஹீரோயசம், குத்து பாட்டு என்கிற கோட்பாட்டை மாற்றி அருமையான ஒரு திரை விருந்து SEETHAMMA VAKITLO SIRIMALLE CHETTU..... குடும்பத்த பிரிஞ்சு இருக்கிறவங்க கட்டாயம் உங்க குடும்பத்த மிஸ் பண்ணுவீங்க... நான் மிஸ் பண்ணுறேன்...

படத்தோட பெயர் வாயில நுழையா விட்டாலும் படம் மனசுல நுழைந்து விட்டது.....

-SIMPLE BUT BEAUTIFUL-

No comments:

Post a Comment