இன்னும் தமிழ் நாட்டில் தலைவா படம் திரையிட படவில்லை. இலங்கையிலும் திரையிட படுமா இல்லையா என சந்தேகம் இருந்தும் இறுதி நேர தீர்மானத்தில் கடந்த எட்டாம் திகதி வெளியிடப்பட்டது. VIP ஷோ க்கு டிக்கெட் இருந்தும் கடைசி நேர அறிவித்தலால் போக முடியவில்லை. ஆனால் அடுத்த நாளே போய் அடிபிடி பட்டு ரெண்டாவது வரிசையில் இருந்து படம் பார்த்து அடி வாங்கியாகி விட்டது.
என்ன தான் இந்த இயக்குனர் A.L. விஜய் மேல் நம்பிக்கை இல்லாவிட்டாலும் "துப்பாக்கி" என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து விட்டு இளைய தளபதி சொதப்ப மாட்டார் என்று நம்பி போனேன்.... காலம் காலமாக பார்த்து பார்த்து தேய்ந்த கதை கரு... சரி அத வேற கோணத்துல காட்டலாம் இல்ல.. ஆங்கில படங்களை மட்டும் காப்பி பண்ணிட்டிருந்த மாண்புமிகு இயக்குனர் இதுல முதலே வந்த தமிழ் படங்களையே காப்பி பண்ணி அரைச்சு நம்ம தலையில பூசிட்டார்...
கதை, திரைக்கதை, ஒன் லைன் என ஆளாளுக்கு நிறைய பேர் சொல்லிட்டாங்க... நான் இங்க ரசிச்ச (கடுப்பான) காட்சிகள மட்டும் சொல்லிட்டு போய்டுறேன்..
- சத்யராஜ் - "நாயகன்" கமல் ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. அவர் வரும் சீன்களில் செட்டுக்கள் கூட எங்கேயோ பார்த்த உணர்வையே தருகின்றது. ஆனா மனுஷன் நல்லா நடிச்சிருக்கார். ஆக்ரோஷமான இடங்களில் ஆக்ரோஷமாகவும் பின்னர் அமைதியாகவும் ... அண்ணா காரக்டரில் நல்லா பொருந்துகிறார். அதுக்காக "ஒரு தடவ நம்ம கைக்கு கத்தி......." அந்த டயலாக் திரும்ப திரும்ப பேசியிருக்க தேவை இல்ல.
- ஆஸ்திரேலியா வில் வரும் "தமிழ் பசங்க" பாடல் அழகாக இருக்கின்றது. டான்ஸ் குரூப் பில் ஜோடி நம்பர் 1, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா பாய்ஸ் ஆடுறது செம ஐடியா.... கையை தூக்கி வைத்து ஸ்டைலாக வணக்கம் சொல்லுமிடம் செம. ஆனா விஜய்யிடம் டான்ஸ் மிஸ்ஸிங்கு... துப்பாக்கி படத்தில் செமையா ஆட்டம் போட்ட நம்ம விஜய்யா இது ன்னு கேட்க தோணுது...
- வெள்ளைக்கார பெண்கள் "தமிழ் பசங்க..." என்று கூறி ஒவ்வொரு முறையும் குத்து ஸ்டெப்ஸ் போடுவது ரசிக்க வைக்கிறது..
- இடைவேளை வரை சந்தானம் படம் தொய்வடையும் போது ஸ்பீட் பண்றார். விஜய்யை "ப்ரோ.." என கூப்பிடுவதும் அமலா பால் திருமணம் ஆனவள் என தெரிந்ததும் விஜயிடம் சொல்லும் டயலாக்குகள் செம...
- "அடுத்தவன் பட்டா போட்ட இடத்துல நம்ம கொட்டா போடுறது தப்பு ப்ரோ.."
- "அடுத்தவன் ஆட்டோக்கு நாம ஆயுத பூஜா பண்றது தப்பு ப்ரோ.."
- "ஊரான் வீட்டு மாங்காய் ல நாம ஊறுகாய் போடா நினைக்கிறது தப்பு ப்ரோ.."
- "மற்றவன் ஐபோன் ல நாம ISD பண்றது தப்பு ப்ரோ.."
- படத்தை தூக்கி நிறுத்தும் இன்னொருவர் தி ஒன் அண்ட் ஒன்லி "சாம் அன்டேர்சன்" சில நிமிடங்களே வந்தாலும் தியட்டரில் விசில் பறக்கிறது தலைவருக்கு. அதுவும் "ராசாத்தி... " பாடலுக்கு அவர் போடும் ஸ்டெப்ஸ்... வாவ்... பிரபுதேவா கூட தோத்திடுவார் போங்க...
- விஜய் - அமலா பால் பின்னணி இசையில் ஆடும் நடனம் இதை விட அழகா "புன்னகை மன்னனில்" கமல் - ரேவதி பண்ணியிருப்பாங்க.
- அமலா பால் திடீரென துப்பாக்கி எடுத்து நீட்டுவது செம ட்விஸ்ட் ஆக இருந்தாலும் அத "ஆதி பகவன்" படத்தில் ஏற்கனவே அமீர் காட்டிட்டார்.
- விஜய்ய ஆரம்பத்தில் இருந்தே ஒரு பலசாலியாக காட்டியிருக்கலாம்.. அத விட்டிட்டு மற்ற டான்ஸ் குரூப் காரங்களோட மொக்க பைட் பண்ற மாதிரி காட்டிட்டு மும்பை ல 50 ரௌடிகள வெட்டிபோடுறது எனக்கென்னமோ சரியா படல....
- வீடுகளை இடிக்க புல் டோசரோடு வரும்போது விஜய் அருவாளோடு உட்கார்ந்திருக்கும் சீன் நல்லா இருந்திச்சு..
- ஒரு வீடியோ டேப்பை எடுக்குறதுக்கு போட்ட சீன இழுவோ இழு அன்று இழுத்து படம் பார்த்திட்டிருக்கும் போதே ஏன் இப்படி பண்றாங்க என யோசிக்க வைக்குது....
- "வாங்கண்ணா வணக்கங்கண்ணா..." பாடல் எதிர்பார்த்த அளவு இல்லையே.. அதுவும் எவ்வளவு பெரிய ஆளு விஜய்... அவரோட குரூப் பெரிசா காட்டிட்டு.. ஒரு நாள் போதை ல இருக்கும் பொது எல்லாரையுமே பொன்வண்ணன் சுட்டு கொள்வது ஏற்று கொள்ள முடியாதது... இதுக்கு படம் பார்க்க போன எங்கள சுட்டு கொன்னிருக்கலாம்...
- விஜய்ய எல்லாரும் "விஷ்வா பாய்" ன்னு தான் கூப்பிர்றாங்க.... அவர கூப்பிட்டு நம்மள கடுப்பேத்துறாங்க..
- விஜய் ன்னாலே பொதுவா நல்லா டான்ஸ் ஆடுவார், பைட் சீன் செமையா இருக்கும்... இது ரெண்டுமே இந்த படத்துல மிஸ்ஸிங்..
- கிளைமாக்ஸ் ல விஜய் குத்தி கொன்னு போட்ட வில்லன அமலா பால் வந்து சுட்டு போடுவார் பாருங்க... என்னா ஒரு புத்திசாலித்தனம்.... இதுக்கு நீங்க உங்களையே சுட்டுக்கலாம்.. தப்பில்ல....
ஆக மொத்தம் ஒரு திறமையான மாஸ் ஹீரோ வோட கால்ஷீட்ட எப்படி பயன்படுத்தணும் ன்னு தெரியாம இருக்கார் இயக்குனர்... நம்ம சிங்கம் இயக்குனர் ஹரி கிட்ட இவர அஸிஸ்டன்ட் டைரக்டரா அனுப்பனும்... ஸ்க்ரீன் ப்ளே யாவது ஒழுங்கா இருக்கும்....
விஜய் வில்லனிடம் போன் ல பேசும் போது "போ போ... இந்த வாட்டி மிஸ் ஆகாது.." ன்னு சொல்லும் இடம் செம ஸ்டைல்....
அடுத்த வாட்டி மிஸ் ஆகாம பார்த்துக்குங்க சார்....
No comments:
Post a Comment