இந்த படத்தைப பற்றி பல பெரிய விமர்சகர்கள் எல்லாம் எழுதி ஓய்ஞ்சுட்டாங்க..... இருந்தாலும் நான் ரசித்த விடயங்களை நான் சொல்லியே தீருவேன். நேற்று அலுப்பாக இருந்ததால் வேலைக்கு லீவு சொல்லிட்டு என்ன பண்ணலாம்னு யோசிச்ச போது 9.30 க்கு தான் ஐடியா வந்திச்சு சூது கவ்வும் பார்க்க போலாமே அப்படீன்னு... அடிச்சு புடிச்சு ஆட்டோவ புடிச்சு கல்கிஸ்ஸ இருந்து மருதானை போகும் போது தான் ஒரு டவுட்டு.. சினி சிட்டில படம் போட்டிருப்பான்களா இல்லையா... கூகுள் ஆண்டவரிடம் இருந்து நம்பர் எடுத்து போன் போட்டு நிச்சயம் பண்ணிட்டு 10.30 க்கு போய் சேர்ந்துட்டேன்.
நலன் குமரசாமி இயக்கும் முதல் படம்.. வழக்கமான தமிழ் சினிமாவின் குத்துப் பாட்டு, சண்டைகள், ரொமான்ஸ், டூயட் எதுவுமில்லாமல் ஹீரோ யாரு வில்லன் யாரு என்று புரியாமல் ஒரு சீரியஸ்ஸான கிட்னாப்பிங் கதையா செம ஜாலியாக தந்திருந்தாரு இயக்குனர். ரொம்ப தாங்க்ஸ் பாஸ்....விஜய் சேதுபதி பற்றி சொல்ல தேவையில்லை..... மனுஷன் ரொம்ப விவரமான ஆளு... தனது வேலையை சிறப்பா செஞ்சிருக்கார்....