என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Wednesday, May 15, 2013

சூது கவ்வும் - எனது பார்வையில்




இந்த படத்தைப பற்றி பல பெரிய விமர்சகர்கள் எல்லாம் எழுதி ஓய்ஞ்சுட்டாங்க..... இருந்தாலும் நான் ரசித்த விடயங்களை நான் சொல்லியே தீருவேன். நேற்று அலுப்பாக இருந்ததால் வேலைக்கு லீவு சொல்லிட்டு என்ன பண்ணலாம்னு யோசிச்ச போது 9.30 க்கு தான் ஐடியா வந்திச்சு சூது கவ்வும் பார்க்க போலாமே அப்படீன்னு... அடிச்சு புடிச்சு ஆட்டோவ புடிச்சு கல்கிஸ்ஸ இருந்து மருதானை போகும் போது தான் ஒரு டவுட்டு.. சினி சிட்டில படம் போட்டிருப்பான்களா இல்லையா... கூகுள் ஆண்டவரிடம் இருந்து நம்பர் எடுத்து போன் போட்டு நிச்சயம் பண்ணிட்டு 10.30 க்கு போய் சேர்ந்துட்டேன்.   

நலன் குமரசாமி இயக்கும் முதல் படம்.. வழக்கமான தமிழ் சினிமாவின் குத்துப் பாட்டு, சண்டைகள், ரொமான்ஸ், டூயட் எதுவுமில்லாமல் ஹீரோ யாரு வில்லன் யாரு என்று புரியாமல் ஒரு சீரியஸ்ஸான கிட்னாப்பிங் கதையா செம ஜாலியாக தந்திருந்தாரு இயக்குனர். ரொம்ப தாங்க்ஸ் பாஸ்....விஜய் சேதுபதி பற்றி சொல்ல தேவையில்லை..... மனுஷன் ரொம்ப விவரமான ஆளு... தனது வேலையை சிறப்பா செஞ்சிருக்கார்....

நான் ரசித்த காட்சிகள்

  • கதைக்கு பெண்களே தேவைப்படாத போதும் பாட்டுக்கும் டூயட்டுக்கும் என ஒரு ஹீரோயின் வைக்காமல் கற்பனையாக காட்டப் படும் நாயகி.
  • நயன்தாரா ஆலயம் - சூப்பர் 
  • பார் ல சண்டை உருவாகும் விதம்
  • கிட்னாப்பிங் கு சொல்லப்படும் 5 விதிகள் 
  • முதல் கடத்தல், பேரம் பேசும் விதம் 
  • கடத்தப்பட்டவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது 
  • போலீஸிடம் இருந்து ஹெலிகாப்ட்டர் மூலம் பணத்தை கொள்ளை அடிக்கும் காட்சி.
  • பிரம்மா என்று அழைக்கப்படும் போலீஸ் கடைசி வரை ஒரு வசனம் கூட பேசாதது
  • ரவுடி டாக்டரின் கூத்துக்கள் 
  • பயங்கர போலீஸ் பின்னுக்கு சூடு வாங்கும் கிளைமாக்ஸ் 
  • அருமை நாயகத்தை தேர்தலில் நிக்க வைப்பது 

இது எல்லாவற்றுக்கும் மேல் பகலவன் என்று அழைக்கப்படும் அந்த கேரக்டர். செம நடிப்பு பாஸ். 'பாஸ் can I join with you" என்று சரக்கடிக்க ஆரம்பிப்பது. "நீ மண்டைய உடைக்க என் பீர் பாட்டில் தான் கிடைச்சுதா" என்று சண்டையை ஆரம்பிப்பது. "10 மணிக்குள்ள கடைய பூட்டிடுவாங்க சீக்கிரம் போங்க பாஸ்" அப்படீன்னு சரக்கடிக்க கிளம்புவது. "நீங்க ஏன் சார் 6 மாசமா என்ன தேடறீங்க" அப்படீன்னு கேட்பது. கடைசியா "இது தான் இருட்டறையில் முரட்டு குத்தா??" சிரிச்சுட்டே கேட்பது. இப்படி மனுஷன் பின்னிட்டார். இன்னும் நிறைய பண்ணனும் பாஸ் நீங்க.

அடுத்தது அருமை நாயகம். அவரே அவரை கடத்த போடும் பிளான். பணத்துக்காக  மனுஷன் மாடியில் இருந்து குதிக்க போவது னு தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். முதலமைச்சராக வரும் ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர் இவர்களும் செமையாக நடித்துள்ளார்கள்.

நான் ரசித்த வசனங்கள் 

எதுக்காக சென்னை வந்தே? எனி பிளான்.?
தெரிலடா 
சென்னைக்கு பிளானோட வர்றவன் திரும்பி தான் போயிருக்கான் எந்த பிளானும் இல்லாம வந்தவன் தான் பெரிய ஆள் ஆகியிருக்கான்.

சார் நீங்க என்ன ஜாப்..?
காலைல 8 மணிக்கு அலாரம் வச்சு சரக்கு அடிக்கிற என்ன பார்த்து எண்டா அப்படி கேட்டே.?

சார் டைம் ப்ளீஸ் ..
சில்லறை இல்லப்பா 
என்னை பார்த்தா பிச்சைகாரன் மாதிரியா தெரியுது 
எனக்கு எப்டி தெரியும் 

உங்க தீம் எனக்கு பிடிச்சிருக்கு 
நயன்தாராவுக்கு கோயில் கட்டுற மூஞ்சிக்கெல்லாம் என் தீம் பிடிக்கும் 

போலீஸ் சைரன் அடிச்சிட்டு வரமாட்டிங்களா.. இப்படி திடுதிப் புனு வந்தா 

பிராடுத்தனம் பண்ணுறதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் அவசியம் 

நான் உயிரோட இருக்கும் போதே என் மகனுக்கு பதவியா.?? இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.
கண்டிச்சுகோ எனக்கென்ன போச்சு..

பணத்தை எங்க கொண்டு வரணும்.??
நாளைக்கு சண்டே.. நாங்க வொர்க் பண்ண மாட்டோம்... மண்டே ஓகே 

டெய்லி 20 டீ குடிக்கிறவன கடத்த பிளான் போட தேவையில்ல... ஒரு டீக்கடை போட்டா போதும்.

என் காசுல தானே குடிச்ச.... என் காசுல தான் சாப்பிடனும்...

நான் கத்த மாட்டேன்.... தயவு செய்து அந்த கர்சீப்ப மட்டும் வாயில வைக்காதிங்க... ரொம்ப நாறுது...

நீங்க பண்ணுறது தப்பு தான் ஆனா அதுல ஒரு நேர்மை இருக்கு...
அவங்க பண்ணுறது சரி தான் ஆனா அதுல ஒரு தப்பு இருக்கு...

கல்யாணத்துல தொடங்கி டைவர்ஸ் ல முடியிது.. இடையில மூனே நாள்.... டைட்டில் "ஹனி மூன்"... எப்டி..??

வேலைக்கு போகல..??
இப்ப என்ன வயசாகிடிச்சு... வேலைக்கு போக...

என்னமா தலையாட்டுறான் பாரு... நீ தான்யா அமைச்சர்...

நீ உங்க அப்பாவ எப்டி ஏமாத்திட்டு இருந்தியோ அப்டி மக்களை ஏமாத்தணும்... அவ்ளோ தான் அரசியல்...


ஆக மொத்தம் கொடுத்த ஆட்டோ காசு அப்புறம் டிக்கட் காசு எல்லாத்துக்கும் முழு திருப்தி.... 2 1/2 மனித்தியானம் செம ஜாலியா இருக்கலாம்... அப்பிடியே ரொம்ப நாளைக்கு அப்புறம் கொட்டாஞ்சேனை பக்கம் போய் சாப்பிட்டு 102 பிடிச்சு வந்து சேர்ந்தாச்சு......

No comments:

Post a Comment