வருடந்தோறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் அதற்கு முந்திய ஆண்டுக்குரிய அறிக்கை வெளியிடப்படும். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நோக்கங்கள், செயற்பாடுகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், முன்னேற்ற நடவடிக்கைகள், தடைகள், சேவைகள், சபையின் பிரிவுகள், நடைமுறையிலுள்ள செயற்றிட்டங்கள், எதிர்கால செயற்றிட்டங்கள் போன்ற விடயங்கள் இந்த ஆண்டறிக்கையில் அடங்கியிருக்கும். இந்த ஆண்டறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூட்டிணைந்த திட்டமிடல் பிரிவைச் (Corporate Planning Division) சார்ந்ததாகும்.
2010 ஆம் ஆண்டில் இருந்து இந்த அறிக்கையின் வடிவமைப்பை சிறிதளவு மாற்றி மேற்குறிப்பிட்ட விடயங்களை 3 கருத் தலைப்புக்களுக்குள் (Themes) அடக்கி வெளியிடப்படுகின்றது. அக்கருத் தலைப்புக்களாவன :
- கூட்டிணைந்த நடைமுறையும் புள்ளிவிபர மீளாய்வும் (Corporate Governance and Statistical Review)
- பேண்தகைமை அறிக்கை (Sustainability Report)
- உட்கட்டமைப்பு அபிவிருத்தி (Infrastructure Development)
மேற்குறிப்பிட்ட தலைப்புகளுக்கான படங்கள் 2011 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான "உலக நீர் தின" சுவரொட்டிப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டுக்கான கருப் பக்கங்கள் (Theme Pages) வடிவமைக்கப் பட்டுள்ளன.
சில காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட முடியாமல் போன 2011 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கை இவ்வாண்டு ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment