தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முறைமைகளுக்கு பொறுப்பான ஒரு உப திணைக்களமாக பொது வேலைகள் திணைக்களத்தின் கீழ் ஆரம்பிக்கப் பட்டது. 1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாராளுமன்றச் சட்டமொன்றின் மூலம் ஒரு நியதிச் சபையாக மாற்றப் படும் வரை, 1965 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு அமைச்சுக்களின் கீழ் ஒரு பிரிவாக இச்சபை செயற்பட்டு வந்தது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது தற்போது நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு விடயங்களை கையாளும் பொருட்டு 2007 ஆம் ஆண்டில் தனியானதொரு அமைச்சாக இவ்வமைச்சு தப்பிக்கப் பட்டது. அத்தோடு இவ்வமைச்சின் செயலலெல்லைக்குள் வருகின்ற ஒரேயொரு அமைப்பாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விளங்குகின்றது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் பாதுகாப்பான குடிநீர் வசதிகளை சனத்தொகையில் அண்ணளவாக 80% ஆனோர் பெறுகின்றனர். இதில் கிட்டத்தட்ட 33% ஆனோர் குழாய் நீர் வழங்கல் முறைமையின் வசதியைப் பெறுகின்றனர்.
Front View of Head Office
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் "நோக்கு" - VISION
தொழிநுட்ப மற்றும் சேவைச் சிறப்பின் மூலம் இலங்கையின் அதி உன்னத பொது வசதிகள் நிறுவனமாக இருத்தல்.
To be the most prestigious utility organization in SriLanka through technological and service excellence.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் "குறிக்கோள்" - MISSION
பாவனையாளர்களின் பூரண திருப்தியை உறுதிப்படுத்திக் கொண்டு குடி நீர் மற்றும் சுகாதாரத்திற்கான நிலையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்கு சேவை புரிதல்.
Serve the nation by providing sustainable water and sanitation solutions ensuring total user satisfaction.
View of a Treatment Plant
கூட்டிணைந்த திட்டம் 2012-2016 (CORPORATE PLANNING 2012-2016)
மீளாய்வுக்கு உட்பட்ட ஆண்டானது கூட்டிணைந்த திட்டத்தின் நான்காவது ஆண்டாக இருந்தது. கூட்டிணைந்த திட்டம் 2012-2016 ஆனது ஜப்பான் வங்கியின் உதவியுடன் 2011 டிசம்பர் மாதம் தயாரிக்கப் பட்டது.
இடப்பட்டுள்ள இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை சிறப்பாக அடையப் பெறுதல் தொடர்பில் உரிய நேரத்திலான மீளாய்வின் அவசியம் முக்கியமானது. கூட்டிணைந்த செயற்பாட்டுத் திட்டத்தின் காலாண்டு முன்னேற்றம் ஒவ்வொரு இலக்குகள் தொடர்பிலும் (07 இலக்குகள்) பொறுப்பு வாய்ந்த முகாமையாளரால் சமர்ப்பிக்கப்படும். ஒவ்வொரு இலக்கின் கீழும் அந்த இலக்கை அடைவதற்கான முதன்மைக் குறிக்கோள்கள் வரையறுக்கப் பட்டுள்ளன. வருட இறுதியின் ஒவ்வொரு இலக்கின் அடைவு வீதமும் முதன்மைக் குறிக்கோள்களின் வளர்ச்சி வீதங்களைக் கொண்டு கணிக்கப் படும்.
2012-2016 க்கான கூட்டிணைந்த திட்டத்தின் இலக்குகள் (GOALS)
- நீர் வழங்கல் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை விஸ்தரித்தல்.
- செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தல்.
- வாடிக்கையாளர் திருப்தியை அடைதல்.
- நிறுவன வளர்ச்சிக்கு தகவல் தொழிநுட்ப பயன்பாடுகளை மேம்படுத்தல்.
- பொருளாதார இருப்பை அதிகரித்தல்.
- மனித வள அபிவிருத்தியை மேம்படுத்தல்.
- கிராமங்களுக்கும் விழிப்பு நிலை சமூகங்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கல்.
நீர் மூலங்கள் பாவிப்பவர்களுக்கு இடையே சரியாக பகிரப்படல் வேண்டும்.
நீரைச் சுத்திகரித்தல் அதிக செலவு தரும் விடயம் ஆகும் அதனை சிக்கனமாகப் பாவிக்க வேண்டும்.
பாவனையாளர்களைச் சென்றடையும் குடிநீர் தரநியமங்களைப் பெற்றிருத்தல் வேண்டும்.
Reference :
- Annual Report of NWSDB
- Corporate Plan 2012 of NWSDB
No comments:
Post a Comment