என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Thursday, December 19, 2013

ராம் லீலா - எனது பார்வையில்...

ஏகப்பட்ட விளம்பரங்கள், சஞ்சய் லீலா பஞ்சாலியின் இயக்கம், பிரமாண்டமான டிரயிலர் எல்லாவற்றிற்கும் மேல் நான் படம் பார்க்க போனதற்கு மூன்று காரணங்கள்.... ஒன்று தீபிகா, ரெண்டு தீபிகா மட்டும், மூன்று தீபிகா மட்டும் தான்... பொதுவாகவே ஹிந்தி படங்கள் பார்க்க போய் ஏமாறுவது கிடையாது... ராம் லீலா கொடுத்த காசுக்கு டபுள் திருப்தி...


ஷேக்ஸ்பியரின் "ரோமியோ-ஜூலியட்" கதையின் தாக்கம் என ஆரம்பித்திலேயே சொல்லி விடுகின்றார்கள்.. அப்போ கதை நமக்கு தெரிஞ்சு போச்சு... இனி படத்தை சுவாரசியமாக கொண்டு போக வேண்டுமே... அதில் பரிபூரண வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர். 

Thursday, October 3, 2013

நூதன திருட்டு....././

இது இன்று கேள்விப்பட்ட விடயம். கேட்டதும் அதிர்ந்து போனேன். இவ்வளவு நாட்களாக நாம் இவ்வாறு யோசிக்கவில்லையே என்று கவலையும் கூட.. தொழினுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் பணத்திற்கு பதிலாக பலவித நுட்பங்கள் பாவிக்கப் பட்டு வருகின்றன. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் பேமன்ட் போன்றன ஒருபுறம்... இது தவிர தங்களின் நிறுவனங்களுக்குள்ளே பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் சில கார்டுக்களும் இருக்கின்றன. நோ லிமிட் கார்டு, ஆர்பிகோ லோயல்டி கார்டு போன்றவை சில உதாரணங்கள். இதை பாவித்து மிக நூதனமாக ஒரு திருட்டு நடத்தப் பட்டுள்ளது. நூறுகள், ஆயிரங்கள் அல்ல மூன்று மாதத்தில் எந்தவித முயற்சியும் செய்யாமல் ரூபாய் மூன்று லட்சத்திற்கும் மேல். எவ்வாறு....???


Thursday, August 15, 2013

தலைவா - எனது பார்வையில்....


இன்னும் தமிழ் நாட்டில் தலைவா படம் திரையிட படவில்லை. இலங்கையிலும் திரையிட படுமா இல்லையா என சந்தேகம் இருந்தும் இறுதி நேர தீர்மானத்தில் கடந்த எட்டாம் திகதி வெளியிடப்பட்டது. VIP ஷோ க்கு டிக்கெட் இருந்தும் கடைசி நேர அறிவித்தலால் போக முடியவில்லை. ஆனால் அடுத்த நாளே போய் அடிபிடி பட்டு ரெண்டாவது வரிசையில் இருந்து படம் பார்த்து அடி வாங்கியாகி விட்டது.

Tuesday, July 23, 2013

பியகம நீர் வழங்கல் திட்டம்

  • 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி மக்களின் பாவனைக்காக கையளிக்கப் பட்டுள்ளது.
  • தேசிய நீர் வழங்கல் தொகுதிக்கு நாளொன்றுக்கு 180 மில்லியன் கன மீட்டர் நீரை வழங்குகின்றது.
  • 1 மில்லியன்னுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் பயன் பெறுகின்றனர்.


Thursday, July 18, 2013

கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம்

திட்ட விபரம்:

உள்ளடங்கும் சனத்தொகை : 40,000
திட்டத்திற்கான செலவு : 1,655 மில்லியன்